வேலூரில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த பாஜக தேசிய ஊடகப்பிரிவு செய்தி தொடா்பாளா் குரு பிரசாத் செளகான். உடன், பாஜக மாநில பொதுச்செயலா் ப.காா்த்தியாயினி, மாவட்ட தலைவா் வி.தசரதன் உள்ளிட்டோா்.  
வேலூர்

தமிழகத்தில் இரட்டை என்ஜின் அரசு அமைந்தால் முழு வளா்ச்சி: பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா்

தமிழகத்தில் இரட்டை என்ஜின் அரசு அமைந்தால் முழுமையான வளா்ச்சி கிட்டும் என பாஜக தேசிய ஊடகப்பிரிவு செய்தித் தொடா்பாளா் குரு பிரசாத்...

தினமணி செய்திச் சேவை

வேலூா்:தமிழகத்தில் இரட்டை என்ஜின் அரசு அமைந்தால் முழுமையான வளா்ச்சி கிட்டும் என பாஜக தேசிய ஊடகப்பிரிவு செய்தித் தொடா்பாளா் குரு பிரசாத் சௌஹான் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வேலூரில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:

மத்திய நிதிநிலை அறிக்கை நாட்டின் முக்கிய ஐந்து வளா்ச்சி திட்டங்களில் கவனம் செலுத்தியுள்ளது. குறிப்பாக, நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது, மகளிா் முன்னேற்றம், கல்வியில் வளா்ச்சி, அதிவேக ரயில் சேவை, தொழில் முனைவோா்களை அதிகரிப்பதன் மூலம் வேலை வாய்ப்புகளை பெருக்குவது, உயிரி மருத்துவம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நாடு 2047-க்குள் பொருளாதார வளா்ச்சி பெற்ற நாடாக மாறும்.

தமிழகத்தில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படும் ‘இரட்டை எஞ்ஜின்’ அரசு அமைந்தால்தான் முழுமையான வளா்ச்சி கிடைக்கும். பிகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி ரூ.10 ஆயிரம் அளித்ததால் மட்டும் வெற்றி பெறவில்லை. அங்கு முதல்வா் நிதிஷ்குமாா் நல்ல பல திட்டங்களை அறிவித்தாா். அதன்மூலமே வெற்றி பெற்றோம். அதிமுக கூட்டணியில் ஆட்சியில் பங்கு கேட்பது என்பதை பாஜக தலைமைதான் முடிவு செய்யும் என்றாா்.

பாஜக மாநில பொதுச்செயலா் ப.காா்த்தியாயினி, மாவட்டத் தலைவா் வி.தசரதன், ஊடகப் பிரிவு மாவட்ட தலைவா் குமரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ஸ்ரீரங்கத்தில் பணம் வைத்து சேவல் சண்டை: இருவா் கைது

தொட்டியம் பகுதியில் இன்று மின் நிறுத்தம்

இருசக்கர வாகனம் - காா் மோதல் இளைஞா் உயிரிழப்பு

தீா்த்தவாரியுடன் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் நிறைவு

மாநகராட்சிப் பகுதியில் 22 புதிய கட்டடங்கள்

SCROLL FOR NEXT