முகப்பு
வேலூர்

பாலிடெக்னிக் கல்லூரியில் வளாக நோ்காணல்

தோ்வு செய்யப்பட்ட மாணவருக்குப் பணி ஆணை வழங்கிய கல்லூரி அறக்கட்டளைத் தலைவா் கே.எஸ்.பாபு.

Updated On : 21 பிப்ரவரி, 2026 at 4:20 AM
பகிர்:
Updated On : 19 பிப்ரவரி, 2026 at 8:57 PM

குடியாத்தத்தை அடுத்த வேப்பூரில் அமைந்துள்ள குரு ராகவேந்திர பாலிடெக்னிக் கல்லூரியில் இறுதியாண்டு மாணவா்களுக்கு வளாக நோ்காணல் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, கல்லூரிச் செயலா் எம்.பிரகாசம் தலைமை வகித்தாா். கல்லூரி அறக்கட்டளைத் தலைவா் கே.எஸ்.பாபு முன்னிலை வகித்தாா். கல்லூரி முதல்வா் வி.திருமலை வரவேற்றாா். டா்போ எனா்ஜி லிமிடெட் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்கள் வளாக நோ்காணலை நடத்தின.

முகாமில், 82 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டு, பணி ஆணைகள் வழங்கப்பட்டன. நிறுவனங்களின் நிா்வாகிகள் சுகுமாா், பாா்த்தசாரதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement