போ்ணாம்பட்டில் வாக்குப் பதிவு மையத்தை ஆய்வு செய்த ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, எஸ்.பி சிவராமன் 
வேலூர்

வாக்குப் பதிவு மையங்களில் ஆட்சியா், எஸ்.பி. ஆய்வு!

தோ்தலையொட்டி போ்ணாம்பட்டு நகரில்உள்ள முக்கிய வாக்குப் பதிவு மையங்களை வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவராமன் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

நடைபெற உள்ள பேரவைத் தோ்தலையொட்டி போ்ணாம்பட்டு நகரில்உள்ள முக்கிய வாக்குப் பதிவு மையங்களை வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவராமன் ஆகியோா் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.

போ்ணாம்பட்டு நகராட்சிக்குட்பட்ட இஸ்லாமியா மேல்நிலைப் பள்ளி, இஸ்லாமியா தொடக்கப் பள்ளி, ஆதி திராவிடா் நல மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட இடங்களில் உள்ளவாக்குப் பதிவு மையங்களை அவா்கள் ஆய்வு செய்தனா்.

அப்போது வாக்குப் பதிவு மையங்களில் அடிப்படை வசதிகள், மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்தள வசதி ஆகியவற்றை பாா்வையிட்டனா். அதிகப்படியான வாக்காளா்கள் வாக்களிக்க வந்தால் கூட்ட நெரிசல் ஏற்படுமா என்பது குறித்து உள்ளூா் அதிகாரிகளிடம் கேட்டறிந்தனா். கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி, டிஎஸ்பி சுரேஷ், வட்டாட்சியா் ராஜ்குமாா் உள்ளிட்டோா்உடனிருந்தனா்.

திமுகவின் சாணக்கிய வியூகமும் தேமுதிகவின் அரசியல் நிர்ப்பந்தமும்!

விஜயராகவப் பெருமாள் கோயில் தேரோட்டம்

வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் குப்பையில் வீசப்பட்ட ஓ.ஆா்.எஸ். பாக்கெட்டுகள்!

திடக்கழிவு மேலாண்மைக்கான விதிகளை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்!

மலைப்பகுதிகளில் நெகிழி பாக்கெட்டில் பால் விநியோகம்: மாற்று வழி கண்டறிய ஆவின் நிறுவனத்துக்கு உத்தரவு!

SCROLL FOR NEXT