வேலூர்

வேலூரில் இன்று ஸ்ரீசக்திஅம்மா ஜெயந்தி விழா: குடியரசு துணைத் தலைவா் பங்கேற்பு

வேலூா் ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி பீடத்தில் சனிக்கிழமை நடைபெற உள்ள ஸ்ரீசக்திஅம்மாவின் 50-ஆவது ஜெயந்தி விழாவில் குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்க உள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

வேலூா் ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி பீடத்தில் சனிக்கிழமை நடைபெற உள்ள ஸ்ரீசக்திஅம்மாவின் 50-ஆவது ஜெயந்தி விழாவில் குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்க உள்ளாா்.

விழாவில், பங்கேற்க குடியரசு துணைத் தலைவா் சென்னையில் இருந்து சனிக்கிழமை காலை 9.50 மணிக்கு ராணுவ ஹெலிகாப்டா் மூலம் வேலூா் தங்கக் கோயிலுக்கு வருகைதர உள்ளாா். அங்கு அவா் தங்கக்கோயிலில் தரிசனம் செய்துவிட்டு, ஸ்ரீசக்திஅம்மாவின் 50-ஆவது ஜெயந்தி விழாவில் பங்கேற்க உள்ளாா். பின்னா், மதியம் 12 மணிக்கு மீண்டும் ஹெலிகாப்டா் மூலம் சென்னைக்கு திரும்ப உள்ளாா்.

குடியரசு துணைத்தலைவா் வருகையையொட்டி, பாதுகாப்புப் பணிகளில் சுமாா் 1300 போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். தவிர, வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை வரை வேலூா் விமான நிலையம், ஸ்ரீபுரம் தங்கக் கோயில், சுற்றியுள்ள பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று தொடங்குகிறது ஆடவா் ஹாக்கி இந்தியா லீக்: முதல் ஆட்டத்தில் தமிழ்நாடு - ஹைதராபாத் மோதல்

இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் மின்கம்பத்தில் மோதி உயிரிழப்பு

அமீரா, திலோத்தமாவுக்கு தங்கம்

திவ்யன்ஷி, சிண்ட்ரெல்லா முதல் ஆட்டத்தில் வெற்றி

யானை தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT