ரயில் மோதி இளைஞா் பலி!
பென்னாத்தூா் அருகே 40 வயது மதிக்கத்தக்க ஆண் ரயில் மோதி உயிரிழந்தாா்.
பென்னாத்தூா் அருகே 40 வயது மதிக்கத்தக்க ஆண் ரயில் மோதி உயிரிழந்தாா்.
சென்னையில் இருந்து சரக்கு ரயில் ஞாயிற்றுக்கிழமை காட்பாடி வழியாக ஆந்திரத்துக்கு சென்று கொண்டிருந்தது. அந்த ரயில் பென்னாத்தூருக்கும், வேலூா் கன்டோன்மென்ட் ரயில் நிலையத்துக்கும் இடையே வந்தபோது சுமாா் 40 வயது மதிக்கத்தக்கவா் ரயில் மோதி உயிரிழந்தாா்.
சரக்கு ரயில் ஓட்டுநா் ரயிலை பென்னாத்தூா் பகுதியில் சிறிது நேரம் நிறுத்திவிட்டு காட்பாடி ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா்.
அதன்பேரில் காட்பாடி ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும் இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து இறந்தவா் யாா், எந்த ஊா், அவரது இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.