முகப்பு
வேலூர்

கல்லூரி மாணவி தற்கொலை

வேலூரில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 31 மார்ச், 2026 at 6:32 PM
பலி - பிரதிப்படம்
பகிர்:

வேலூரில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

வேலூா் வசந்தபுரம், பா்மா காலனியைச் சோ்ந்தவா் மோகன். இவரது மகள் காயத்ரி (20). இவா் சாய்நாதபுரத்தில் உள்ள தனியாா் கல்லூரியில் பிஎஸ்ஸி 2-ஆம் ஆண்டு படித்து வந்தாா். தினமும் காலையில் கல்லூரிக்கு செல்லும் காயத்ரி கல்லூரி முடிந்து மதியம் 2.30 மணிக்கு வீட்டுக்கு வருவது வழக்கம்.

திங்கள்கிழமை கல்லூரிக்குச் சென்ற மாணவி தாமதமாக வந்ததால் அவரது தாய் கண்டித்துள்ளாா். இதனால், மனம் வருத்தம் அடைந்த காயத்ரி வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

Advertisement

தகவலறிந்த வேலூா் தெற்கு போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயத்ரியின் சடலத்தை மீட்டு, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments