முகப்பு
கோயம்புத்தூர்

மாணவியை கடத்திய நடத்துநர் கைது

வெள்ளக்கோவில், நவ. 5:   வெள்ளக்கோவில் காமராஜபுரத்தில் திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் கலைஞர் படிப்பகம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.   விழாவில் மாநில நெடுஞ்சாலை மற்றும் சிறு துறை

Updated On : 25 டிசம்பர், 2023 at 4:13 PM
பகிர்:

வெள்ளக்கோவில், நவ. 5:   வெள்ளக்கோவில் காமராஜபுரத்தில் திமுக அரசின் சாதனை விளக்க

பொதுக்கூட்டம் மற்றும் கலைஞர் படிப்பகம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

  விழாவில் மாநில நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்

பேசியது: திமுக அரசின் திட்டங்களை மக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உயிர்

காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் தகுதியுள்ள அனைவரும் ஒரு லட்சம்

ரூபாய் வரையிலான தரமான சிகிச்சை பெறலாம். இலவச கலர் டிவி, சமையல் எரிவாயு அடுப்பு

வழங்கும் திட்டங்கள் அடித்தட்டு மக்களுக்கும் பயன்படுகிறது. கோவையில் நடைபெறும் உலகத் தமிழ்

செம்மொழி மாநாட்டில் கட்சிப் பாகுபாடின்றி அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றார்.

  நகர செயலாளர் எம்.எஸ்.மோகனசெல்வம் தலைமை வகித்தார். ஒன்றிய இளைஞரணி

அமைப்பாளர் கே.ஆர்.முத்துக்குமார் வரவேற்றார். ஒன்றிய செயலாளர் வி.பி.பாலசுப்பிரமணியம்,

வேளாண் விற்பனைக்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.கனகசபாபதி, நகர துணை செயலாளர் சி.குமரவடிவேல்

ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர் மன்ற உறுப்பினர் ஆர்.ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →