முகப்பு
கோயம்புத்தூர்

அழிக்கப்படும் விளைநிலங்கள்: சூனியமாகி வரும் விவசாயம்

உடுமலை, ஆக. 8: உடுமலை மற்றும் மடத்துக்குளம் வட்டத்தில் உள்ள ஆயிரக் ணக்கான ஏக்கர் விளைநிலங்கள் வேகமாக அழிக்கப்பட்டு வருகின்றன. இதனால் விவசாயிகளின் எதிர்கால வாழ்க்கை சூனியமாகும் நிலை ஏற்பட்டுள்ளது. ÷திர

Updated On : 27 டிசம்பர், 2023 at 5:02 PM
பகிர்:

உடுமலை, ஆக. 8: உடுமலை மற்றும் மடத்துக்குளம் வட்டத்தில் உள்ள ஆயிரக் ணக்கான ஏக்கர் விளைநிலங்கள் வேகமாக அழிக்கப்பட்டு வருகின்றன. இதனால் விவசாயிகளின் எதிர்கால வாழ்க்கை சூனியமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

÷திருமூர்த்தி அணை மற்றும் அமராவதி அணை பாசன நிலங்கள், ஏழுகுள பாசன நிலங்கள், மானாவாரி பாசன நிலங்கள் என, உடுமலை மற்றும் மடத்துக்குளம் வட்டங்களில் ஒரு லட்சம் ஏக்கருக்கு மேல் விளைநிலங்கள் உள்ளன. இவற்றில் பிரதானமாக தென்னை, கரும்பு, நெல் மற்றும் பல்வேறு வகையான காய்கறி வகைகள், பயிறு வகைகள் விவசாயிகளால் பயிரிடப்பட்டு வருகின்றன.

÷இந்நிலையில் ரியல் எஸ்டேட் தொழில், செங்கல் சூளைகள், காற்றாலை நிறுவனங்கள், கோழிப் பண்ணைகள், தென்னைநார்த் தொழிற்சாலைகளால் ஆயிரக் கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் அழிந்து வருகின்றன. இதனால் விவசாயிகள், விவசாயக் கூலிகளின் எதிர்கால வாழ்க்கை பறிபோகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ரியல் எஸ்டேட்:

÷கடந்த சில ஆண்டுகளாக உடுமலை மற்றும் மடத்துக்குளம் வட்டத்தில் ரியல் எஸ் டேட் தொழில் கொடிகட்டி பறந்து வருகிறது. முதலில் உள்ளூரைச் சேர்ந்த ஒருசில இடைத்தரகர்களால் மட்டும் செய்யப்பட்டு வந்த இந்த தொழிலில், தற்போது பெரிய நிதி நிறுவன அதிபர்கள், வெளியூரைச் சேர்ந்தவர்கள், வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் அதிக அளவில் முதலீடு செய்து வருகின்றனர்.

÷இதற்காக விவசாய விளைநிலங்கள் பெருமளவில் அழிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஆயிரக் கணக்கான தென்னை மரங்கள் வேரோடு வெட்டிச் சாய்க்கப்பட்டு வருகின்றன. உடுமலை நகரை ஒட்டியுள்ள போடிபட்டி அருகிலும் பள்ளபாளையம் கிராமத்திலும் ரோட்டின் இருபுறமும் ஆயிரக் கணக்கான தென்னை மரங்கள் வெட்டப்பட்டு லேஅவுட்களாக மாற்றப்பட்டு விட்டன.

÷உடுமலையில் இருந்து வடக்கே 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சின்னவீரம்பட்டி கிராமத்தில்  ஆயிரக் கணக்கான தென்னை மரங்கள் வேரோடு சாய்க்கப்பட்டு அந்த நிலங்களும் புதிய லேஅவுட்களாக மாற்றப்பட்டு வருகின்றன.

÷உடுமலையில் இருந்து  12 கி.மீ. தொலைவில் உள்ள பெரிய வாளவாடியில் கடந்த சில நாட்களாக ஆயிரக் கணக்கான தென்னை மரங்கள் கனரக எந்திரங்களால் அழிக்கப்பட்டு வருகின்றன. இதுபோக கோட்டமங்கலம், மடத்துக்குளம், தேவனூர் புதூர், குடிமங்கலம், பெதப்பம்பட்டி, ஜல்லிபட்டி போன்ற கிராமங்களிலும் விளை நிலங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.

செங்கல் சூளைகள்:

÷இது ஒருபுறம் இருக்க, மடத்துக்குளம் வட்டத்தில் உள்ள நூற்றுக் கணக்கான செங்கல் சேம்பர்கள் மற்றும் சூளைக்காரர்களால் விளைநிலங்கள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகின்றன. அங்குள்ள விளைநிலங்கள் அனைத்தும் மலடாகி வருகின்றன. கடத்தூர், கணியூர், வேடபட்டி, காரத்தொழுவு உள்ளிட்ட 25க்கு மேற்பட்ட கிராமங்களில் உள்ள விளைநிலங்கள் முற்றிலும் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றன.

÷இந்த விளைநிலங்கள் அமராவதி அணையின் மூலம் மூன்று போகம் நெல் விளையும் பூமிகளாக இருந்தவை என்பதும், சூளைகளை எதிர்த்து இப்பகுதி விவசாயிகள் பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

காற்றாலை நிறுவனங்கள்:

÷உடுமலையின் தெற்கே உள்ள குடிமங்கலம், பூளவாடி, பெதப்பம்பட்டி உள்ளிட்ட 50க்கு மேற்பட்ட கிராமங்களில் 3 ஆயிரம் காற்றாலைகள் இயங்குகின்றன. இந்த கிராமங்களில் உள்ள விவசாயிகள் தங்களது விளைநிலங்களை காற்றாலை நிறுவனங்களிடம் விற்றுவிட்டு மாற்றுத் தொழிலுக்கு சென்று விட்டனர்.

÷மீதமுள்ள ஒரு கிராமங்களின் விவசாயிகளும் தங்களிடம் இருக்கும் விவசாய நிலங்களை காற்றாலை நிறுவனங்களுக்கு கொடுத்துவிட்டு குடும்பத்துடன் வெளியூர் செல்ல முடிவு செய்து விட்டனர்.

÷பருவ நிலை மாற்றத்தால் மழையில்லாததாலும், பிஏபி தண்ணீரை நம்பி ஏமாந்ததாலும் ஆண்டு முழுவதும் விவசாயம் செய்தும் பயனில்லாத நிலையில் நூற்றுக் கணக்கான விவசாயிகள் கோழிப்பண்ணை தொழில் தொடங்கியும், தென்னைநார்த் தொழிற்சாலை தொடங்கியும் விவசாயத்தை கைவிட்டு விட்டனர். தங்களுடைய விளை நிலங்களிலேயே இந்தத் தொழிலை தொடங்கி நடத்தி வருகின்றனர்.

÷இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.மதுசூதனன் கூறியது:

÷உடுமலை மற்றும் மடத்துக்குளம் வட்டத்தில் ஒரு லட்சம் ஏக்கருக்கு மேல் விவசாய விளைநிலங்கள் இருந்தன. ரியல் எஸ்டேட், செங்கல் சூளைகள், காற்றாலை நிறுவனங்கள், கோழிப்பண்ணைகள், நார்த்தொழிற் சாலைகளால் விவசாய நிலங்கள் சூறையாடப்பட்டு வருகின்றன. தற்போது சுமார் 20 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் முற்றிலும் அழிந்து விட்டன.

÷நிலைப்பயிரான தென்னை மரங்கள் அழிக்கப்பட்டு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இப்படியே போனால் விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலிகளின் எதிர்காலம் சூனியமாகி விடும். ஆகையால் தமிழக அரசு உடனடியாக இதில் தலையிட்டு, விளைநிலங்களை அழிக்கக் கூடாது என தனியாக ஒரு சட்டம் கொண்டு வர வேண்டும் என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →