கந்துவட்டி கும்பலின் பிடியில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள்
உடுமலை, ஆக. 16: உடுமலையில் மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான பெண்கள் கந்துவட்டிக் கும்பல்களிடமும், தனியார் நிதி நிறுவனங்களிடமும் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடனைத் திரும்ப
உடுமலை, ஆக. 16: உடுமலையில் மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான பெண்கள் கந்துவட்டிக் கும்பல்களிடமும், தனியார் நிதி நிறுவனங்களிடமும் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடனைத் திரும்பச் செலுத்த முடியாத ஒருசில பெண்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்த விரிவான தகவல்கள்:
உடுமலை, மடத்துக்குளம் வட்டங்களில் சுமார் 4 ஆயிரத்திற்கு மேற்பட்ட மகளிர் சுயஉதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றால் பெண்கள் தங்களது திறமைகளை வெளிக்கொணர்ந்து கல்வியிலும், பொருளாதாரத்திலும் சமுதாயத்திலும் மேம்பாடு அடைந்து வந்தனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மகளிர் சுயஉதவிக் குழுக்கள் திறம்பட செயல்பட்டு வந்தன.
இதைப் பயன்படுத்திக் கொண்டு பல தனியார் நிதி நிறுவனங்கள், மைக்ரோ பைனான்ஸ் என்ற பெயரில் ஏற்கனவே முறையாக செயல்பட்டு வரும் மகளிர் சுயஉதவிக் குழுக்களைப் பிரித்து சிறு, சிறு குழுக்களாக மாற்றி அவர்களிடம் ஊடுருவி வருகின்றன. சேமிப்பு வேண்டாம், தொழில் பயிற்சி வேண்டாம், வங்கியில் முன்பணம் கட்ட வேண்டாம், மாதாந்திரக் கூட்டம் வேண்டாம், கையெழுத்திட்டால் உடனடியாக கடன் என்று அவர்களுக்கு ஆசை காட்டி வலையில் விழ வைக்கின்றனர்.
"பெண்ணடிமை விலங்கொடிப்போம், ஏழை பெண்களின் முன்னேற்றமே எங்களது குறிக்கோள், சுரண்டலற்ற சமுதாயத்தை உருவாக்குவோம்' என்ற கவர்ச்சிகரமான வாசகங்களுடன், சமுதாய வளர்ச்சி திட்டம், கிராம விடியல் திட்டம் என்ற பெயர்களில் மகளிர் சுயஉதவிக் குழு பெண்களை இந்த நிதி நிறுவன ஊழியர்கள் எளிதாக அனுகுகின்றனர்.
ஒரு குழுவுக்கு குறைந்தபட்சம் 5 பேர் வேண்டும்; அந்த குழுவுக்கு ஒரு தலைவி வேண்டும்ச இது இருந்தால் போதும், குறைந்தபட்சம் ஒருவருக்கு | 10 ஆயிரம் வீதம் | 50 ஆயிரம் வரை ஒரு குழுவுக்கு இந்த நிதி நிறுவனங்கள் மூலம் வழங்கப்படுகிறது.
அதேசமயம், 36 சதவிகிதம் முதல் 48 சதவிகிதம் வரை வட்டியுடன் கடனைச் செலுத்த வேண்டும். இதில் இன்சூரன்ஸ், டாகுமென்ட் சார்ஜ் என | 600 பிடித்தம் செய்யப்படுகிறது. இதற்கு பத்திரங்களில் கையெழுத்தும் வாங்கப்படுகிறது.
குறிப்பாக ஒரு குழுவை நிதி நிறுவனத்திடம் அறிமுகம் செய்து வைக்கும் நபருக்கு |10 ஆயிரத்தில் | 1,500 பிடித்தம் செய்து வழங்கப்படும் என்று கவர்ச்சிகரமான திட்டமும் இதில் உள்ளது.
இந்த திட்டத்தின்படி ஒரு நபர் வாங்குவது | 8,500 அவர்கள் திரும்பச் செலுத்துவது | 13,000. கந்துவட்டியை விட மோசமான இந்தத் திட்டத்தில் ஆயிரக் கணக்கான மகளிர் சுயஉதவிக் குழுக்கள் உடுமலையில் சிக்கிக்கொண்டு மீள முடியாமல் தவித்து வருகின்றனர். கடனை செலுத்த முடியாமல், கடந்த சில மாதங்களில் பல பெண்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
சமுதாயத்தில் பெண்களை நல்ல நிலைக்கு கொண்டுவரும் உயர்ந்த எண்ணத்தில் தொடங்கப்பட்ட இந்த மகளிர் சுயஉதவிக் குழுக்கள் தற்போது கந்துவட்டிக் கும்பல்க ளிடம் சிக்கித் தவித்து வருகின்றன.
இது குறித்து தமிழக முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோருக்கு ஏற்கனவே பல புகார் மனுக்கள் சென்றுள்ளன. இது குறித்து தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கியின் கிளை மேலாளர் கூறியது:
உடுமலை வட்டத்தில் கடந்த மூன்று வருடங்களாக, 10க்கு மேற்பட்ட இம் மாதிரியா ன மைக்ரோ பைனான்ஸ் நிதி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் கொடுத்துள்ளது கு றிப்பிடத் தக்கது.
ஏழை, எளியவர்களை குறிவைத்து செயல்படும் இந்த கந்து வட்டிக் கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன. கேரளா மாநிலம், சென்னை, தேனி, திருச்சி உள்ளிட்ட இடங்களை மையமாகக்கொண்டு செயல்படும் இந்த நிதி நிறுவனங்கள், உள்ளூர் முகவரிகளை குறிப்பிடாமலே செயல்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவவதும் இதன் கிளைகள் இயங்கி வருகின்றன.
இம்மாதிரியான மைக்ரோ பைனான்சில் கடன் பெற்றுக்கொண்ட குழுக்கள் ஏற்கனவே வங்கிகளில் வாங்கியிருக்கும் கடன்களை கடந்த இரண்டு வருடமாக திரும்பச் செலுத்தாமல் உள்ளனர். இது குறித்து தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என்றார்.