முகப்பு
கோயம்புத்தூர்

காலமாற்றத்தால் கரையும் சுண்ணாம்புச் சூளைகள்

பல்லடம், டிச. 28: காலமாற்றத்தால் சுண்ணாம்புச் சூளைகள் மெல்ல அழிந்து வருகின்றன. பாரம்பரியமான குடிசைத்தொழில் நலிவடைந்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது.  ÷பொங்கல் பண்டிகை என்றாலே முதலில் நினைவுக்கு வருவது

Updated On : 27 டிசம்பர், 2023 at 6:43 PM
பகிர்:

பல்லடம், டிச. 28: காலமாற்றத்தால் சுண்ணாம்புச் சூளைகள் மெல்ல அழிந்து வருகின்றன. பாரம்பரியமான குடிசைத்தொழில் நலிவடைந்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது.

 ÷பொங்கல் பண்டிகை என்றாலே முதலில் நினைவுக்கு வருவது வீட்டுக்கு வெள்ளை அடித்து தூய்மைப்படுத்துவது தான். இதற்கான பணிகளை மார்கழி துவங்கியவுடனேயே துவங்கிவிடுவர்.

 ÷வெள்ளை அடிக்க சுண்ணாம்புச் சூளைகளில் சுண்ணாம்புக் கல் வாங்கியது ஒரு காலம். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னரும்கூட,சுண்ணாம்புச்சூளைகளில் முன்கூட்டியே சொல்லிவைத்து சுண்ணாம்புக்கல் வாங்க வேண்டியிருந்தது. பண்டிகைக்காலங்களில் அதற்கு கிராக்கி அதிகம்.

 ÷பல்லடத்தில் 5க்கு மேற்பட்ட சூளைகள் இருந்தன. இன்று ஒரு சூளைகூட இல்லை.

 தங்கள் தொழில் நசிவு குறித்து, பல்லடம் அருகிலுள்ள கோவில்பாளையத்தில் கடந்த 10 ஆண்டுகளாக சூளைத் தொழில் நடத்தி வரும் சண்முகம் கூறியது:

 ÷முன்னெல்லாம் இந்த சீசனில் தினசரி ஒரு டன் அளவுக்கு சுண்ணாம்புக் கல் விற்பனை நடக்கும். ஆனால் இன்று ஒரு நாளைக்கு 30 சட்டிகூட விற்பனையாவதில்லை. அனைவரும் ஒயிட் சிமென்டுக்கு மாறிவிட்டனர். கையை ஓட்டையாக்கும் சுண்ணாம்புக் கல் மூலம் வெள்ளை அடிக்க தொழிலாளர்களும் முன்வருவதில்லை.

 ÷கோழிப்பண்ணைகளுக்கு கிருமி நாசினியாக சுண்ணாம்புத் துகள்கள் தேவைப்படுவதால்தான், இத்தொழில் இப்போது பெயரளவுக்கு நடக்கிறது.

 பழைய கட்டடங்களை இடித்தால் சுண்ணாம்பு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப்பொருளான ஒடைக்கல்லை இலவசமாக எடுத்து செல்லுமாறு சொன்ன காலம் உண்டு. இன்று ஒடைக்கல் கிடைப்பதே சிரமமாக உள்ளது.

 ÷கடந்த ஆண்டு ஆயிரம் கிலோ ரூ. 500க்கு விற்றது தற்போது ரூ. 700 ஆக விலை உயர்ந்து விட்டது. அதேபோல் சூளையில் வேலை செய்ய யாரும் முன்வருவதில்லை. வடகிழக்கு மாநிலப் பகுதிகளிலிருந்து நிறைய இளைஞர்கள் வேலை கேட்டு வருகின்றனர். அவர்களுக்கு தினசரி ரூ. 150 கூலி கொடுத்து இலவசமாக தங்குமிடம் கொடுத்துள்ளதால் வேலை செய்கின்றனர்.

 ÷சுண்ணாம்புகல்லை சூரியநல்லூர் பகுதியிலிருந்து லாரிகள் மூலம் கொண்டு வரவேண்டும். இதற்கு பர்மிட் உள்பட 3 ஆயிரம் செலவு ஆகும். இந்த விலையில் வாங்கிவந்து தொழில் செய்ய முடியாது.

 ÷எனவே தமிழக அரசு அழிந்துகொண்டு இருக்கும் சுண்ணாம்புச் சூளைத் தொழிலை பாதுகாக்க சலுகைகள் வழங்க வேண்டும்.

 இல்லையெனில், தற்போதைய சுண்ணாம்புச் சூளைகள் வருங்காலத் தலைமுறைக்கு நினைவு சின்னங்களாக மாறும் நிலை வெகுதூரத்தில் இல்லை என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →