முகப்பு
கோயம்புத்தூர்

தொழிலாளர் நல வாரியங்கள் மூலம் ரூ.44 லட்சம் உதவி

திருப்பூர், பிப்.27: தொழிலாளர் நல வாரியங்கள் மூலம், கோவை சரகத்தில் ரூ.44 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்று, தொழிலாளர் துறை துணை ஆணையர் ப.மாரிமுத்து (படம்)தெரிவித்தார். திருப்பூ

Updated On : 27 டிசம்பர், 2023 at 2:55 PM
பகிர்:

திருப்பூர், பிப்.27: தொழிலாளர் நல வாரியங்கள் மூலம், கோவை சரகத்தில் ரூ.44 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்று, தொழிலாளர் துறை துணை ஆணையர் ப.மாரிமுத்து (படம்)தெரிவித்தார்.

திருப்பூரில் அவர் செய்தியாளர்களுக்கு சனிக்கிழமை அளித்த பேட்டி:

திருப்பூர் மாவட்டத்தில், உடலுழைப்பு நல வாரியம், கட்டுமான நல வாரிய அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. உடலுழைப்பு நல வாரியம், கட்டுமான நலவாரியம் ஆகியவற்றுக்கான உறுப்பினர்கள் பதிவு செய்யும் முகாம் நடைபெற்று வருகிறது.

Advertisement

பல்லடம், தாராபுரம், வெள்ளக்கோவில் ஆகிய இடங்களில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றுள்ளது. விசைத்தறித் தொழிலாளர்கள் அதிகம் உள்ள இடங்களிலும் இதேபோன்ற முகாம்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கோவை சரகத்தில் அமைப்பு சாரா நலவாரியம் மூலம் இதுவரை 1,197 பயனாளிகளுக்கு ரூ.35 லட்சத்து 87 ஆயிரத்து 47 மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. கட்டுமான நலவாரியம் மூலம் 745 பேர்களுக்கு ரூ.8 லட்சத்து 74 ஆயிரத்து 940 மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

மொத்தம் 1,442 பயனாளிகளுக்கு ரூ.43 லட்சத்து 83 ஆயிரத்து 714 மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. நலவாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகையைப் பெற விரும்புவோர், ரேசன் கார்டு அல்லது கல்விச்சான்றிதழை சமர்ப்பித்தால் போதுமானது, என்றார். தொழிலாளர் துறை ஆய்வாளர் சசிகலா உடன் இருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments