கோவையில் ஸ்ரீ ஜெகன்நாதர் ரதயாத்திரை
கோவை, ஜன. 8: அகில பாரத கிருஷ்ண பக்தி இயக்கம் சார்பில், கோவையில் சனிக்கிழமை நடந்த ஸ்ரீ ஜெகன்நாதர் ரதயாத்திரையில், பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர். அகில பாரத கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) சார்பில் ஆண்ட
கோவை, ஜன. 8: அகில பாரத கிருஷ்ண பக்தி இயக்கம் சார்பில், கோவையில் சனிக்கிழமை நடந்த ஸ்ரீ ஜெகன்நாதர் ரதயாத்திரையில், பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர்.
அகில பாரத கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) சார்பில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் பிரமாண்டமான ரதயாத்திரை கோவையில் நடத்தப்படுகிறது. 2011ம் ஆண்டிற்கான ரதயாத்திரை சனிக்கிழமை நடந்தது. கோவை, ராஜவீதி, தேர்நிலைத்திடலில் இருந்த அலங்கரிக்கப்பட்ட பிரமாண்டத் தேரில் ஸ்ரீ ஜெகன்நாதர், ஸ்ரீ பலராமர், ஸ்ரீ சுபத்திரை ஆகியோர் காட்சியளித்தனர்; வண்ண மலர், பட்டாடை அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
ஹரே ராம, ஹரே கிருஷ்ண கோஷங்களுக்கிடையே மகாதீபாராதனை நடந்தது. ராஜவீதியில் புறப்பட்ட தேர், பக்தர்களின் வெள்ளத்தில் நீந்தியது. கிருஷ்ண பக்திப் பாடல்களைப் பாடி, ஆடி பக்தர்கள் மகிழ்ந்தனர். ஓப்பணக்கார வீதி, வைசியாள் வீதி, கருப்பண்ண கவுண்டர் வீதி வழியாக மீண்டும் ராஜவீதியை ரதம் வந்தடைந்தது. பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் இதில் திரண்டனர்.
இஸ்கான் இயக்கத்தின் ஜெயபதாக சுவாமி மகராஜ், பானு சுவாமி மகராஜ், பக்தி புருஷோத்தம் சுவாமி மகராஜ், பக்தி வினோதா மற்றும் அன்பர்கள் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். மாநகர போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.