முகப்பு
கோயம்புத்தூர்

மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வல்லுநர் குழு அமைப்பு

உதகை, ஜன. 8: மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் வகையில் மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகத்தால் மேற்கு மலைத் தொடர் சுற்றுச்சூழல் வல்லுநர் குழு அமைக்கப்ப

கோயம்புத்தூர்

மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வல்லுநர் குழு அமைப்பு

உதகை, ஜன. 8: மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் வகையில் மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகத்தால் மேற்கு மலைத் தொடர் சுற்றுச்சூழல் வல்லுநர் குழு அமைக்கப்ப

Updated On : 28 டிசம்பர், 2023 at 4:04 PM
பகிர்:

உதகை, ஜன. 8: மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் வகையில் மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகத்தால் மேற்கு மலைத் தொடர் சுற்றுச்சூழல் வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

  இது தொடர்பாக மாவட்டஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் கூறியது:

  மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில், சுற்றுச்சூழலைப் பாதிக்கும் தன்மை வாய்ந்த பகுதிகளின் தற்போதைய தன்மையைக் கண்டறிந்து, அவற்றின் எல்லைகளை சுற்றுச்சூழல் நுண்ணிய உணர்வுள்ள பகுதியாக வரையறுக்கும் வகையில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

  இந்தக் குழுவானது தமிழக மக்கள் கருத்தைக் கண்டறியும் பணியைத் தொடங்கியுள்ளது. இக்குழுவின் உறுப்பினரும், தமிழகப் பொறுப்பாளருமான பி.ஜே.கிருஷ்ணன், முதல்கட்டமாக உதகை அண்ணா கலையரங்கில் வரும் 18-ம் தேதி காலை 10 மணி முதல் பகல் 1.30 மணி வரை, மாவட்ட அளவிலான முதல்கட்ட ஆலோசனைக் கூட்டத்தை நடத்த உள்ளார்.

  எனவே, சம்பந்தப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த அரசு அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசு சாரா நிறுவனத்தினர், விவசாயிகள் மற்றும் ஆர்வமுள்ளோர், இந்தக் கூட்டத்தில் பங்கேற்று, தங்களது கருத்துகளைத் தெரிவிக்கலாம்.

  மேற்குத் தொடர்ச்சி மலை 1,600 கி.மீ. நீளத்துக்கு குஜராத், மகாராஷ்டிரம், கோவா, கர்நாடகம், கேரளம் மற்றும் தமிழகம் ஆகிய 6 மாநிலங்களை உள்ளடக்கியதாகும்.

  இதன் 25 சத பரப்பு தமிழகத்தில் நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர். திருநெல்வேலி மற்றும கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களை உள்ளடக்கியது.

  மேற்குத் தொடர்ச்சி மலை உலகின் 25 வன உயிரின வெப்ப மண்டலங்களில் ஒன்றாகவும், இந்தியாவின் புவியியல் தனித்துவம் வாய்ந்த 3 பெரிய மையங்களில் ஒன்றாகவும் உள்ளது.

  மொத்தமுள்ள 9 வகையான வனங்களில், தமிழகத்தில் உள்ள மலைப் பகுதிகள் 8 வகையான வனங்களை உள்ளடக்கியது.

  நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனங்கள் மிகவும் வளம் நிறைந்தவையாகவும், மாறுபட்டதாகவும் உள்ளன.

  அழியும் தருவாயில் உள்ள பல்வேறு உயிரினங்களுக்கும், தாவர இனங்களுக்கும் ஒரு பாதுகாப்பு பெட்டகமாக நீலகிரி மாவட்டம் திகழ்கிறது.

  நீலகிரி மாவட்டம், பிற மாவட்டங்களின் நீராதாரங்களுக்கு அடிப்படையாக உள்ளது. இதன் நீராதாரம் காவிரி ஆற்றுக்கும் கணிசமான நீர்வளத்தை அளிக்கிறது.

  இந்த மாவட்டத்தில் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளிலும், சுற்றுப்புற முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு மற்றும் உயிர்ப்பித்தல் போன்ற நடவடிக்கைகளை அரசுக்குப் பரிந்துரைக்க இக்குழு கடமைப்பட்டுள்ளது.

  சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986-ன் கீழ் தோற்றுவிக்கப்பட்டுள்ள மேற்குத் தொடர்ச்சி மலை சுற்றுப்புறவியல் ஆணையம், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்திய அரசுக்கு அளிக்க வேண்டிய பரிந்துரைகளை முடிவு செய்யும்.

  எனவே, நீலகிரி மாவட்ட மக்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் இந்தக் கூட்டத்தில் தவறாமல் பங்கேற்று, தங்களது கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும். இந்த கருத்துகள் தொகுக்கப்பட்டு, மேற்குத் தொடர்ச்சி மலை சுற்றுப்புறவியல் ஆணையத்துக்குத் தெரிவிக்கப்படும்.

முழு கட்டுரையைப் படிக்க →