மாணவர் வேலைவாய்ப்பு திருவிழா
கோவை, ஜன. 8: கோவை, அரசம்பாளையம் எஸ்விஎஸ் கல்வி நிறுவனங்கள் சார்பில் மாணவர் வேலைவாய்ப்புத் திருவிழா ஜன. 28,29,30 தேதிகளில் நடக்கிறது. எஸ்விஎஸ் வேலைவாய்ப்புத் திருவிழா என்ற பெயரிலான இந்த வேலைவாய்ப்பு நி
கோயம்புத்தூர்மாணவர் வேலைவாய்ப்பு திருவிழா
கோவை, ஜன. 8: கோவை, அரசம்பாளையம் எஸ்விஎஸ் கல்வி நிறுவனங்கள் சார்பில் மாணவர் வேலைவாய்ப்புத் திருவிழா ஜன. 28,29,30 தேதிகளில் நடக்கிறது. எஸ்விஎஸ் வேலைவாய்ப்புத் திருவிழா என்ற பெயரிலான இந்த வேலைவாய்ப்பு நி
கோவை, ஜன. 8: கோவை, அரசம்பாளையம் எஸ்விஎஸ் கல்வி நிறுவனங்கள் சார்பில் மாணவர் வேலைவாய்ப்புத் திருவிழா ஜன. 28,29,30 தேதிகளில் நடக்கிறது.
எஸ்விஎஸ் வேலைவாய்ப்புத் திருவிழா என்ற பெயரிலான இந்த வேலைவாய்ப்பு நிகழ்ச்சியில், பொறியியல், கலை, அறிவியல், வணிகவியல், மேலாண்மை, கணினி பயன்பாடு பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் மற்றும் இறுதியாண்டு மாணவர்கள் பங்கேற்கலாம்.
ரிலையன்ஸ் கம்யூனிகேசன், யுரேகா போர்ப்ஸ், ஏபிடி குழுமம், ஐஎன்ஜி வைஸ்யா, மெட்லைப் மற்றும் மேக்ஸ் நியூயார்க் காப்பீட்டு நிறுவனங்கள் போன்ற 25 நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 20 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலவச முன்பதிவிற்கு, 97900 13999, 90470 59994 என்ற எண்களில் ஒருங்கிணைப்பாளர்களை தொடர்பு கொள்ளலாம் என்று கல்லூரி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.