முகப்பு
கோயம்புத்தூர்

"விதிகளை மீறும் உள்ளாட்சி அமைப்புகள் மீது கடும் நடவடிக்கை'

ஈரோடு, ஜன. 8: கட்டட அனுமதி வழங்கும்போது விதிமுறைகளை மீறும் உள்ளாட்சி அமைப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தா.சவுண்டையா தெரிவித்தார்.   இது தொடர்பாக அவர் மேலும் கூறியது:

Updated On : 28 டிசம்பர், 2023 at 4:03 PM
பகிர்:

ஈரோடு, ஜன. 8: கட்டட அனுமதி வழங்கும்போது விதிமுறைகளை மீறும் உள்ளாட்சி அமைப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தா.சவுண்டையா தெரிவித்தார்.

  இது தொடர்பாக அவர் மேலும் கூறியது:

  மக்கள் எளிதாக கட்டட அனுமதி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தரை தளம், 2 தளம், 4,000 சதுர அடி வரையிலான தனி குடியிருப்பு மற்றும் தரை தளம், முதல் தளம் மற்றும் 2,000 சதுர அடி வரையிலான தனி வணிகக் கட்டங்களுக்கு, சம்பந்தப்பட்ட உள்ளாட்சிகள் அனுமதி வழங்கலாம் என அரசு அறிவித்துள்ளது.  ஈரோடு உள்ளூர் திட்டக் குழுமத்துக்கு உள்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டதில், உள்ளாட்சிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரப் பகிர்வை மீறி, விதிகளை முறையாகப் பின்பற்றாமல், கட்டணங்களை முறையாக வசூல் செய்யாமல் கட்டட அனுமதி வழங்கியுள்ளது தெரிய வந்துள்ளது.

  கட்டட அனுமதி வழங்கும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை, முறையாகப் பின்பற்ற வேண்டும். இது குறித்த விவரங்கள் தேவைப்படும் உள்ளாட்சி அமைப்புகள், உள்ளூர் திட்டக் குழும அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளலாம்.

  கட்டட அனுமதி வழங்கும்போது, அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் உள்ளாட்சி அமைப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →