கோயம்புத்தூர்

ஆள் பற்றாக்குறையால் திணறும் மின்வாரியம்!

கோவை, பிப். 28: கோவை மின்வாரிய அலுவலகம் ஆள்பற்றாக்குறையால் திணறுகிறது. ஒயர்மேன், உதவியாளர்கள் உள்பட 4,300 பேர் தேவைப்படுவதாக மின்வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.÷ ÷தமிழகத்தில் 2,000 மெகாவாட் மின்சாரம் பற

ஆர். ஆதித்தன்

கோவை, பிப். 28: கோவை மின்வாரிய அலுவலகம் ஆள்பற்றாக்குறையால் திணறுகிறது. ஒயர்மேன், உதவியாளர்கள் உள்பட 4,300 பேர் தேவைப்படுவதாக மின்வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.÷

÷தமிழகத்தில் 2,000 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறை நிலவுகிறது. இதைச் சமாளிக்க தேசிய மின்சாரச் சந்தையில் இருந்து மின்சாரம் வாங்கி, விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

÷இருந்த போதிலும் மாநிலத்தில் இப்போது 2 மணி நேரம் மின்தடை அமலில் உள்ளது. கோடைக்காலம் தொடங்கி விட்டதால், இந்த மின்தடை நேரம் அதிகமாகும் என்று தெரிகிறது.

÷மின்சாரப் பற்றாக்குறை ஒருபுறமிருக்க, ஆள் பற்றாக்குறையும் சேர்ந்து கோவை மின் வாரிய அலுவலகத்தைத் திணறடித்து வருகிறது. நாளொன்றுக்கு மின்தடை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்காக 40 முதல் 50 தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. ஆனால், சரியான நேரத்தில் மின் நுகர்வோரின் பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காண முடியாமல் மின்வாரியம் திணறி வருகிறது.

தரக்குறைவான இன்சுலேட்டர்கள்?

÷மின்கம்பங்களில் பொருத்தப்பட்டுள்ள இன்சுலேட்டர்கள் திடீரென பழுதாகிவிடுவதால், மின் துண்டிப்பு ஏற்படுகிறது. பிரச்னையைக் கண்டறிந்து சரி செய்ய கூடுதல் நேரம் ஆவதால், மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

÷இது குறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறுகையில், "கடந்த சில நாள்களில் மட்டும் சுமார் 50 இன்சுலேட்டர்கள் பழுதாகிவிட்டன. இப்போது வரும் இன்சுலேட்டர்கள் தரக்குறைவாக உள்ளது. இந்த பழுதை நீக்கி மீண்டும் மின் இணைப்பு தர நேரம் தேவைப்படுகிறது. மக்கள் பொறுமையாக இருப்பது அவசியம்' என்று தெரிவித்தனர்.

ஆள்பற்றாக்குறை...:

÷கோவை மின்வாரிய மண்டலத்தைப் பொருத்த வரையில், களப்பணியில் ஈடுபடும் ஊழியர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது. கோவை மண்டலத்தில் 245 பிரிவுகள் உள்ளன. ஒரு பிரிவில் ஒயர்மேன், உதவியாளர் உள்பட 20 பேர் இருக்க வேண்டும்.

÷ஆனால், இப்போது வெறும் 4 பேர் மட்டுமே உள்ளதாகத் தெரிகிறது. இதில் 3 பேர் மேற்பார்வை பணியில் ஈடுபடுவர். ஒருவர் மட்டுமே களப்பணியில் ஈடுபட வேண்டிய நிலைமை உள்ளது என்று மின்வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

4,300 பேர் தே வை...:

÷அதேபோல ஒயர்மேன்களின் தேவை 1,998 ஆக உள்ளது. மொத்தப் பணியிடங்கள் 2,457 ஆகும். ஆனால், சுமார் 500 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். இது தவிர உதவியாளர் பணியிடங்களின் எண்ணிக்கை 2,584 ஆகும். ஆனால் பணியில் இருப்பது சுமார் 349 பேர் தான் என்று தெரிகிறது. சுமார் 2,235 உதவியாளர்கள் தேவைப்படுகின்றனர்.

÷நிர்வாகப் பணி மற்றும் மேற்பார்வை பணியைத் தவிர்த்து ஒயர்மேன்களும், உதவியாளர்களும் தான் மின்கம்பம் ஏறுதல், மின் இணைப்பு வழங்குதல் போன்ற களப்பணிகளை மேற்கொள்கின்றனர். இப்போது ஆள்பற்றாக்குறை நிலவுவதால், இப் பணிகளை செய்வதில் காலதாமதம் நிலவுகிறது. மின் நுகர்வோர் பிரச்னைகளையும் உடனடியாக சரி செய்ய முடிவதில்லை என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு

சூப்பர் 8: இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை பந்துவீச்சு!

கோழிக்கோடு: சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டதால் உணவகம் மீது தாக்குதல்

பெர்லின் திரைப்பட விழாவில் அசாம் பெண் இயக்கிய படத்துக்கு விருது!

SCROLL FOR NEXT