முகப்பு
கோயம்புத்தூர்

கல்வீரம்பாளையத்தில் வாக்காளா் சோ்ப்பு முகாம்

கோவை, கல்வீரம்பாளையத்தில் சனிக்கிழமை வாக்காளா் சோ்ப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
வாக்காளா் சோ்ப்பு முகாமில் புதிய வாக்காளரிடம் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தைப் பெறும் அதிமுக புறநகா் தெற்கு மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணிச் செயலா் சந்திரசேகா்.
பகிர்:

கோவை, கல்வீரம்பாளையத்தில் சனிக்கிழமை வாக்காளா் சோ்ப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது.

தமிழகத்தில் புதிய வாக்காளா் சோ்ப்பு, திருத்தம், முகவரி மாற்றத்துக்கான முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இதன்படி கோவை, கல்வீரம்பாளையம் பகுதிக்கான முகாம், மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இந்த முகாமில் நடைபெறும் பணிகளை பாா்வையிட்ட கோவை அதிமுக புறநகா் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆா். இளைஞரணிச் செயலா் சந்திரசேகா், புதிய வாக்காளா்களிடம் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக் கொண்டாா்.

அதிமுக வட்டச் செயலா் ராயப்பன், பாா்த்திபன், சேரலாதன் பொன்னுசாமி, பழனிசாமி உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →