முகப்பு
கோயம்புத்தூர்

கோவை அருகே வழக்குரைஞர் வெட்டிக் கொலை

வழக்குரைஞரை காரில் அழைத்துச் சென்று மர்ம கும்பல் வெட்டிக் கொலை செய்தது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

கோயம்புத்தூர்

கோவை அருகே வழக்குரைஞர் வெட்டிக் கொலை

வழக்குரைஞரை காரில் அழைத்துச் சென்று மர்ம கும்பல் வெட்டிக் கொலை செய்தது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Updated On : 2 ஆகஸ்ட், 2024 at 11:16 PM
பகிர்:

கோவை அருகே வழக்குரைஞரை காரில் அழைத்துச் சென்று மர்ம கும்பல் வெட்டிக் கொலை செய்தது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

கோவை, விஸ்வநாதபுரம் ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம் மகன் உதயகுமார் (48), வழக்குரைஞர். இவரது மனைவி நித்தியவள்ளி. மருத்துவரான இவர் கிளினிக் நடத்தி வருகிறார்.

உதயகுமாரை அவரது காரில் 4 பேர் கொண்ட கும்பல் வெள்ளிக்கிழமை அழைத்துச் சென்றதாகத் தெரிகிறது. பின்னர் அவரை கோவை-பொள்ளாச்சி சாலை யில் மயிலேறிபாளை யம் வரதோப்பு என்ற பகுதியில் பிரிட்டோ என்பவருக்குச் சொந்தமான கோழிப் பண்ணை அருகே சரமாரியாக வெட்டியுள்னனர்.

இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அலறல் சப்தம் கேட்டு கோழிப்பண்ணையில் இருந்து ஆள்கள் வருவதைக் கண்ட மர்ம நபர்கள், உதயகுமாரின் காரிலேயே அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

தகவலறிந்து வந்த செட்டிபாளையம் போலீஸார், சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக சிங்கா நல்லூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த தடய வியல் துறையினர் அப்பகுதியில் கிடைத்த தடயங்களை சேகரித்தனர். மேலும் மோப்ப நாய் உதவியுடன் ஆய்வு மேற்கொண்ட னர்.

கொலை நடந்த இடத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் நேரில் வந்து பார்வையிட்டார். சம்பவம் தொடர்பாக செட்டி பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து 6 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.

மேலும், கொலைக்கான காரணம் குறித்தும் விசாரித்து வருகின்றனர். வழக்குரைஞர் உதயகுமார் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு கோவை மாவட்ட வழக்குரைஞர்கள் சங்கத்தினர் கண்ட னம் தெரிவித்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →