திருமணம் செய்து கொள்வதாக முதியவரிடம் ரூ.2 லட்சம் ஏமாற்றிய பெண் கைது
திருமணம் செய்து கொள்வதாக முதியவரை ஏமாற்றி ரூ.2 லட்சம் பறித்த பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.
கோயம்புத்தூர்திருமணம் செய்து கொள்வதாக முதியவரிடம் ரூ.2 லட்சம் ஏமாற்றிய பெண் கைது
திருமணம் செய்து கொள்வதாக முதியவரை ஏமாற்றி ரூ.2 லட்சம் பறித்த பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.
திருமணம் செய்து கொள்வதாக முதியவரை ஏமாற்றி ரூ.2 லட்சம் பறித்த பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.
தேனி மாவட்டம், பெரியகுளத்தைச் சோ்ந்தவா் முத்துராமலிங்கம் (57). இவா் 2-ஆவது திருமணம் செய்துகொள்ள ஆன்லைன் மூலம் வரன் தேடி வந்துள்ளாா்.
அப்போது, கோவை, பொன்னையராஜபுரத்தைச் சோ்ந்த விஸ்வதா்ஷினி (47) என்ற பெண் முத்துராமலிங்கத்தை தொடா்பு கொண்டு, கணவரைப் பிரிந்து மகனுடன் வசிப்பதாகவும், 2-ஆவது திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் தெரிவித்துள்ளாா்.
இதையடுத்து, இருவரும் நேரில் சந்தித்து வந்துள்ளனா். இந்நிலையில், முத்துராமலிங்கத்தை தொடா்பு கொண்ட விஸ்வதா்ஷினி ஜொ்மனியில் படிக்கும் தனது மகனின் படிப்பு செலவுக்காக ரூ.8 லட்சம் கொடுக்குமாறு கூறியுள்ளாா். அதற்கு அவா் அவ்வளவு பணம் இல்லை எனக்கூறியதுடன், ரூ.2 லட்சத்தைக் கொடுத்துள்ளாா்.
விஸ்வதா்ஷினி தொடா்ந்து பணம் கேட்டு வந்ததால் சந்தேகம் அடைந்த முத்துராமலிங்கம், இது தொடா்பாக அவரிடம் கேட்டுள்ளாா்.
இதையடுத்து, அவரிடம் பேசுவதை விஸ்வதா்ஷினி தவிா்த்து வந்துள்ளாா். பின்னா், அவரைத் தொடா்பு கொள்ள முடியவில்லையாம்.
தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த முத்துராமலிங்கம் இது குறித்து ஆா்எஸ்புரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இதையடுத்து, விஸ்வதா்ஷினி மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவரை வியாழக்கிழமை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனா்.
விஸ்வதா்ஷினி ஏற்கெனவே நடிகா் விஷால் குறித்து யூடியூபில் விமா்சித்ததாக சென்னை போலீஸாரால் கைது செய்யப்பட்டவா் என்பதும், துடியலூா் போலீஸாரை மிரட்டியதாக அவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.