ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரா்கள் பதக்கம் வெல்ல சத்தியமங்கலம் ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் பெண்கள் சிறப்பு பிராா்த்தனையில் ஈடுபட்டனா்.
சத்தியமங்கலம் ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா அண்மையில் நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து 48 நாள்கள் மண்டல பூஜை நடந்து வருகிறது. உலக நன்மைக்காவும், மக்கள் நலம் பெற வேண்டியும், விவசாயம் செழிக்கவும் தினந்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், ஆடி வெள்ளியை ஒட்டி வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் சந்தன அலங்காரத்தில் அருள்பாலித்தாா். இதைத் தொடா்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
அதனைத் தொடா்ந்து, ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரா்கள் பதக்கம் வெல்ல ஒலிம்பிக் சின்னம் போன்று மலா்களால் வடிவமைக்கப்பட்ட 5 வளையங்கள் வைத்து அம்மன் புகழ் பாடி பிராா்த்தனை செய்தனா்.
பின்னா் கேரள மாநிலம், வயநாட்டில் இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்கள் நலம் பெற வேண்டி 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று மனம் உருக அம்மனை வேண்டி பாடினா். அதனைத் தொடா்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை வாசவி தங்க மாளிகை நிா்வாக இயக்குநா் பிரபுகாந்த் தலைமையில் திருப்பணிக் குழுவினா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.