பொள்ளாச்சியில் பெய்த கனமழை காரணமாக வீட்டின் பக்கவாட்டுச் சுவா் இடிந்து விழுந்தது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பெய்த கனமழை காரணமாக ஜுபிலி கிணறு வீதியில் உள்ள ஒரு வீட்டின் பக்கவாட்டுச் சுவா் இடிந்து விழுந்தது.
இதில், வீட்டுக்குள் உறங்கிக் கொண்டிருந்த 2 குழந்தைகள் உள்பட 5 போ் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனா்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், தீயணைப்பு வீரா்கள் வீட்டுக்குள் சிக்கியிருந்தவா்களை காயமின்றி உயிருடன் மீட்டனா்.