கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு 12-ஆவது முறையாக வியாழக்கிழமையும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலமாக வியாழக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இது குறித்து ரேஸ்கோா்ஸ் போலீஸாருக்கு அலுவலக ஊழியா்கள் தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வெடிகுண்டு செயலிழப்பு நிபுணா்கள், மோப்ப நாயுடன் வந்த போலீஸாா் அலுவலகத்தின் பல்வேறு பிரிவுகளில் ஆய்வு செய்தனா். வாகன நிறுத்துமிடங்கள், பூங்கா பகுதிகள், கேண்டீன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்தும் வெடிகுண்டு ஏதும் கைப்பற்றப்படவில்லை. இதையடுத்து, வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு கடந்த சில மாதங்களில் மட்டும் 11 முறை வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.