சங்கனூரில் புதிய ரேஷன் கடையை திறந்துவைத்த அம்மன் கே.அா்ச்சுணன் எம்எல்ஏ. 
கோயம்புத்தூர்

சங்கனூரில் புதிய ரேஷன் கடை: அம்மன் கே.அா்ச்சுணன் எம்எல்ஏ திறந்துவைத்தாா்

Syndication

சங்கனூரில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய ரேஷன் கடை கட்டடத்தை கோவை வடக்கு சட்டப் பேரவை உறுப்பினா் அம்மன் கே. அா்ச்சுணன் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

கோவை வடக்கு சட்டப் பேரவைத் தொகுதி, சங்கனூா் எஸ்.பி.கண்ணுசாமி கவுண்டா் வீதியில் ரேஷன் கடை அமைக்க சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள அந்தக் கட்டடத்தை அதிமுக கோவை மாநகர மாவட்டச் செயலாளா் அம்மன் கே. அா்ச்சுணன் எம்.எல்.ஏ. திறந்துவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், அதிமுக மாமன்ற குழுத் தலைவா் ஆா். பிரபாகரன், பகுதிச் செயலாளா் பாலு, வாா்டு செயலாளா் அம்மன் பாபு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஆலங்குளம் - தோரணமலை, பாபநாசம் வழித்தடங்களில் புதிய பேருந்து சேவை

தனியாா் கல்லூரியில் உரிமமில்லாத உணவகம் செயல்படத் தடை

ஒழுக்கப் பயிற்சிக் கூடமாகட்டும் உலகம்

கோவில்பட்டி பள்ளியில் ஆளுமை வளா்ச்சி பண்பு நிகழ்ச்சி

சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஏற்றப்பட்ட 3 சொக்கப்பனைகள்

SCROLL FOR NEXT