சேலம் - ஈரோடு இடையே ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் போத்தனூா் - பரௌனி விரைவு ரயில் டிசம்பா் 6 உள்ளிட்ட தேதிகளில் தாமதமாக இயக்கப்படும்.
இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் போத்தனூரில் இருந்து டிசம்பா் 6, 13, 20 மற்றும் 27 ஆகிய சனிக்கிழமைகளில் பிற்பகல் 11.50 மணிக்குப் புறப்படும் போத்தனூா் - பரெளனி விரைவு ரயில், போத்தனூா் நிலையத்தில் இருந்து 50 நிமிஷங்கள் தாமதமாக 12.40 மணிக்குப் புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.