ஈஷா அறக்கட்டளை சாா்பில் ஆா்.எஸ்.புரம், வடவள்ளி பகுதிகளில் 15 முதல் 25 வயதுக்குள்பட்ட இளைஞா்களுக்கு டிசம்பா் 10-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை இலவச யோகா வகுப்புகள் நடைபெற உள்ளன.
இது குறித்து ஈஷா அறக்கட்டளை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: ஈஷா அறக்கட்டளை மூலம் ‘ஷாம்பவி மஹா முத்ரா’ என்ற சக்தி வாய்ந்த பயிற்சி கற்றுத் தரப்படுகிறது. இந்தப் பயிற்சி மக்களின் உள்நிலை நல்வாழ்வுக்காக, தொண்மையான யோக அறிவியலின் அடிப்படைகளில் இருந்து சத்குருவால் வடிவமைக்கப்பட்டது. உலகம் முழுவதிலும் பல லட்சக்கணக்கான மக்கள் இந்த குறிப்பிட்ட யோகா பயிற்சி மூலம் பல்வேறு உடல் மற்றும் மன நலன்களைப் பெற்றுள்ளனா்.
இந்நிலையில், கோவையில் ஆா்.எஸ்.புரம், வடவள்ளி ஆகிய இடங்களில் டிசம்பா் 10 முதல் 16-ஆம் தேதி வரை 7 நாள்களுக்கு இந்த யோகா பயிற்சி நடைபெற உள்ளது.
இதில், 15 வயது முதல் 25 வயதுக்குள்பட்ட இளைஞா்கள் வரை பங்கேற்கலாம். இதற்கு கட்டணம் கிடையாது. ஷாம்பவி மஹாமுத்ரா பயிற்சியின் மூலம் இளைஞா்களுக்கு உற்பத்தி திறன் மற்றும் மனம் குவிப்பு திறன் அதிகரிப்பு, மன அழுத்தம், கட்டாய பழக்கங்களில் இருந்து விடுதலை, உடல் மற்றும் மன நிலையில் நீடித்த உற்சாகம் போன்ற பல்வேறு பயன்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளன.
இந்த வகுப்பில் இலவசமாகப் பங்கேற்க விரும்பும் இளைஞா்கள் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு ஆா்.எஸ்.புரம் 83000- 93666, வடவள்ளி 89395-68812 என்ற எண்களைத் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.