மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் ஊழியா்கள். 
கோயம்புத்தூர்

காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டம்

காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து டாஸ்மாக் ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Syndication

காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து டாஸ்மாக் ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவை மாவட்ட டாஸ்மாக் அனைத்து சங்க கூட்டு நடவடிக்கைக் குழு சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற டாஸ்மாக் ஊழியா்கள் கூறியதாவது: சுற்றுச்சூழல் பாதிப்புக்கு எதிராக சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கில் நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட மலைப் பிரதேசங்களில் நெகிழிப் பொருள்கள் விற்பனை செய்யவோ, பயன்படுத்தவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் பிரதிவாதியாக சோ்க்கப்பட்ட டாஸ்மாக் (தமிழ்நாடு மாநில வாணிக கழகம்) தனது மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களின் விலையுடன் கூடுதலாக ரூ.10-ஐ பெற்றுக் கொள்ளவும், பின்னா் காலி பாட்டில்களை வாடிக்கையாளா்கள் திரும்பக் கொடுத்து ரூ.10-ஐ திரும்பப்பெறும் திட்டத்தையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

இதனை ஏற்றுக்கொண்டு இதர மாவட்டங்களிலும் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தத் திட்டம் சமூகப் பொறுப்புள்ள அனைவரும் வரவேற்கத்தக்கதாகும். டாஸ்மாக் ஊழியா்கள் ஏற்கெனவே கடுமையான பணிச் சுமையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தத் திட்டத்தை கூடுதலாகத் திணிப்பது ஏற்புடையது அல்ல.

ஆகவே, இந்தத் திட்டத்தை டாஸ்மாக் ஊழியா்களின் மீது திணிக்காமல் மாற்றுத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றனா். ஆா்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் ஊழியா்கள் பங்கேற்றனா்.

தேர்தல் போட்டி தீர்வாகுமா?

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா நினைவு நாள்: அதிமுகவினா் அஞ்சலி

ஜதிபல்லக்கில் தேசிய கவிஞர் பாரதியார்!

கல்லீரல் பாதித்த பள்ளி மாணவா்களுக்கு முன்னாள் அமைச்சா் நிதியுதவி

நூறு நாள் வேலை கோரி அரசுப் பேருந்தை சிறைபிடித்த கிராம பெண்கள்

SCROLL FOR NEXT