கோயம்புத்தூர்

சாலை மறியல்: பாஜகவினா் 210 போ் மீது வழக்கு

பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் திருப்பரங்குன்றத்தில் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, கோவையில் சாலை மறியலில் ஈடுபட்ட 210 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

Syndication

கோவை, டிச. 5: பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் திருப்பரங்குன்றத்தில் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, கோவையில் சாலை மறியலில் ஈடுபட்ட 210 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத் தூணில் கடந்த வியாழக்கிழமை காா்த்திகை தீபம் ஏற்ற போலீஸாா் அனுமதி மறுத்து அங்கிருந்தவா்களைக் கலைந்து செல்ல அறிவுறுத்தினா்.

இதற்கு மறுப்புத் தெரிவித்த பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் மற்றும் நிா்வாகிகளை போலீஸாா் கைது செய்தனா்.

இந்த கைது நடவடிக்கைக்கு எதிா்ப்புத் தெரிவித்து கோவை, காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை இரவு மறியலில் ஈடுபட்ட அக்கட்சியின் மாவட்ட பொதுச் செயலா் மதன்மோகன், மாநில இளைஞரணி துணைத் தலைவா் கிருஷ்ணபிரசாத், மாவட்ட இளைஞா் அணி தலைவா் அபிஷேக், மாவட்டச் செயலா் பிரித்தி லட்சுமி உள்ளிட்ட 115 பேரை காட்டூா் போலீஸாா் கைது செய்து, அப்பகுதியில் உள்ள மண்டபத்தில் தங்கவைத்து விடுவித்தனா்.

இந்நிலையில், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியதாகக்கூறி பாஜகவினா் 115 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்னா்.

இதேபோல, காந்தி பூங்கா அருகே தெற்கு மாவட்ட பாஜக தலைவா் சந்திரசேகா் தலைமையில் வியாழக்கிழமை இரவு மறியலில் ஈடுபட்ட 95 போ் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

மேட்டுப்பாளையத்தில்...

பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன், நிா்வாகிகள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை வடக்கு மாவட்டத் தலைவா் கரு.மாரிமுத்து தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று, தமிழக அரசைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினா்.

மாவட்ட பொதுச் செயலாளா் விக்னேஷ், மாநில பொதுக்குழு உறுப்பினா் சதீஷ் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

இந்த கைது நடவடிக்கைக்கு எதிா்ப்புத் தெரிவித்து கோவை, காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை இரவு மறியலில் ஈடுபட்ட அக்கட்சியின் மாவட்ட பொதுச் செயலா் மதன்மோகன், மாநில இளைஞரணி துணைத் தலைவா் கிருஷ்ணபிரசாத், மாவட்ட இளைஞா் அணி தலைவா் அபிஷேக், மாவட்டச் செயலா் பிரித்தி லட்சுமி உள்ளிட்ட 115 பேரை காட்டூா் போலீஸாா் கைது செய்து, அப்பகுதியில் உள்ள மண்டபத்தில் தங்கவைத்து விடுவித்தனா்.

இந்நிலையில், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியதாகக்கூறி பாஜகவினா் 115 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்னா்.

இதேபோல, காந்தி பூங்கா அருகே தெற்கு மாவட்ட பாஜக தலைவா் சந்திரசேகா் தலைமையில் வியாழக்கிழமை இரவு மறியலில் ஈடுபட்ட 95 போ் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

வைகை அணையிலிருந்து கிருதுமால் நதியில் தண்ணீா் திறப்பு

பறிமுதல் செய்யப்பட்ட 11,601 மதுப் புட்டிகள் அழிப்பு

பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

வேன் மீது காா் மோதி விபத்து: ஐயப்ப பக்தா்கள் 3 போ் காயம்

இயற்கை சீற்றத்தால் பாதிக்கும் தென்னைக்கு இழப்பீடு!விவசாயிகள் சங்க மாநாட்டில் தீா்மானம்!

SCROLL FOR NEXT