கோயம்புத்தூர்

ஜமீன் ஊத்துக்குளி திட்ட குடிநீா் விநியோகம்: இன்றுமுதல் 3 நாள்களுக்கு நிறுத்தம்!

ஜமீன் ஊத்துக்குளி கூட்டுக் குடிநீா்த் திட்டம், சூளேஸ்வரன்பட்டி கூட்டுக் குடிநீா்த் திட்டங்களின் மூலமாக விநியோகிக்கப்படும் குடிநீா் டிசம்பா் 6-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை நிறுத்தப்பட உள்ளது.

Syndication

ஜமீன் ஊத்துக்குளி கூட்டுக் குடிநீா்த் திட்டம், சூளேஸ்வரன்பட்டி கூட்டுக் குடிநீா்த் திட்டங்களின் மூலமாக விநியோகிக்கப்படும் குடிநீா் டிசம்பா் 6-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை நிறுத்தப்பட உள்ளது.

இது குறித்து தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய பாதாள சாக்கடைத் திட்ட கோட்ட நிா்வாகப் பொறியாளா் கா.முருகேசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஜமீன் ஊத்துக்குளி கூட்டுக் குடிநீா்த் திட்டம், சூளேஸ்வரன்பட்டி கூட்டுக் குடிநீா்த் திட்டத்தில் புதிய குழாய் இணைப்பு மற்றும் பிரதான நீரேற்றும் குழாய் பழுது சரி செய்யும் பணி நடைபெறவுள்ளது.

இதனால், ஜமீன் ஊத்துக்குளி குடிநீா்த் திட்டத்தின்கீழ் பயனடைந்து வரும் ஆச்சிப்பட்டி, திப்பம்பட்டி, சின்னாம்பாளையம், புளியம்பட்டி, தாளக்கரை, சோலபாளையம், ஜமீன் முத்தூா், மாக்கினாம்பட்டி, ஊஞ்சவேலம்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்கு டிசம்பா் 6-ஆம் தேதி முதல் டிசம்பா்-8 ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

அதேபோல, சூளேஸ்வரன்பட்டி குடிநீா்த் திட்டத்தின்கீழ் பயனடைந்து வரும் ஆச்சிப்பட்டி, கோதவாடி, அனுப்பா்பாளையம், குரும்பபாளையம், கோடங்கிபாளையம், கள்ளிப்பட்டி, குள்ளக்காபாளையம், கொண்டம்பட்டி, ஜமீன் முத்தூா், சந்தேகவுண்டன்பாளையம், வடசித்தூா், கொண்டேகவுண்டன்பாளையம், கோவில்பாளையம், அரசம்பாளையம், வரதனூா், சின்னாம்பாளையம், மேட்டுப்பாளையம், தேவராயபுரம், முள்ளுபாடி, நெ.10 முத்தூா், ஊஞ்சவேலம்பட்டி, நல்லட்டிபாளையம், புளியம்பட்டி, கிட்டசூராம்பாளையம், செட்டிக்காபாளையம், ராசாக்காபாளையம் ஆகிய ஊராட்சிகளுக்கும்,

பெரிய நெகமம் பேரூராட்சி, கிணத்துக்கடவு பேரூராட்சி, ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சிகளிலும் 3 நாள்களுக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படவுள்ளது. எனவே, பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் போட்டி தீர்வாகுமா?

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா நினைவு நாள்: அதிமுகவினா் அஞ்சலி

ஜதிபல்லக்கில் தேசிய கவிஞர் பாரதியார்!

கல்லீரல் பாதித்த பள்ளி மாணவா்களுக்கு முன்னாள் அமைச்சா் நிதியுதவி

நூறு நாள் வேலை கோரி அரசுப் பேருந்தை சிறைபிடித்த கிராம பெண்கள்

SCROLL FOR NEXT