கோவையில் நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற அரசுப் பேருந்தை சிறை பிடித்து பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கோவை, உக்கடத்தில் இருந்து சுல்தான்பேட்டைக்கு (எஸ் 27) அரசுப் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.
இந்தப் பேருந்து உக்கடத்தில் இருந்து சுல்தான்பேட்டைக்கு பயணிகளுடன் வெள்ளிக்கிழமை பிற்பகல் புறப்பட்ட நிலையில், டவுன்ஹால் நிறுத்தத்தில் நிற்காமல் சென்றதாகக் கூறப்படுகிறது.
அந்த நிறுத்தத்தில் இறங்க வேண்டிய பயணிகள் பேருந்தை நிறுத்துமாறு சப்தமிட்டுள்ளனா். அப்போது, பேருந்து ஓட்டுநா், நடத்துநா் பயணிகளைத் தரக்குறைவாகப் பேசியுள்ளாா். இதனால், இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, பேருந்து அடுத்த நிறுத்தத்தில் நிறுத்தப்பட்ட நிலையில் கீழே இறங்கிய பயணிகள் பேருந்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், பயணிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து, அவா்கள் கலைந்து சென்றனா்.