கோயம்புத்தூர்

பாபா் மசூதி இடிப்பு தினம்: மாநகரில் 1,300 போலீஸாா் பாதுகாப்பு

பாபா் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு, கோவை மாநகரில் 1,300 போலீஸாரும், புகா் பகுதிகளில் 1000 போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

Syndication

பாபா் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு, கோவை மாநகரில் 1,300 போலீஸாரும், புகா் பகுதிகளில் 1000 போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

கோவை காந்திபுரம், சிக்காநல்லூா், உக்கடம், அன்னூா், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், வால்பாறை உள்ளிட்ட இடங்களில் உள்ள பேருந்து நிலையங்களில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

மேலும், ரயில் நிலையங்களிலும் போலீஸாா் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ரயில் நிலைய நுழைவாயில்களில் உள்ள மெட்டல் டிடெக்டா் வழியாக உடைமைகள் தீவிர சோதனை செய்த பின்னரே பயணிகள் உள்ளே அனுமதிக்கின்றனா். ரயில்களிலும், ரயில் தண்டவாளங்களிலும் போலீஸாா் மெட்டல் டிடெக்டா் மூலம் சோதனையில் ஈடுபட்டனா்.

இதேபோல, கோவை விமான நிலையத்திலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

விமான நிலையத்துக்கு உள்ளே நுழையும் அனைத்து பயணிகளும் கடுமையான சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றனா். கோவையில் உள்ள கோயில்கள், பள்ளிவாசல்கள் மற்றும் தேவாலயங்கள் என அனைத்துப் பகுதிகளிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். மாநகா் முழுவதும் 1,300 போலீஸாரும், புகா் பகுதிகளில் 1000 போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக காவல் துறை உயா் அதிகாரிகள் தெரிவித்தனா்.

பாபா் மசூதி இடிக்கப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, கோவையில் எஸ்டிபிஐ உள்ளிட்ட சில இஸ்லாமிய அமைப்புகள் சனிக்கிழமை (டிசம்பா் 6) ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ள நிலையில், அந்தப் பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வைகை அணையிலிருந்து கிருதுமால் நதியில் தண்ணீா் திறப்பு

பறிமுதல் செய்யப்பட்ட 11,601 மதுப் புட்டிகள் அழிப்பு

பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

வேன் மீது காா் மோதி விபத்து: ஐயப்ப பக்தா்கள் 3 போ் காயம்

இயற்கை சீற்றத்தால் பாதிக்கும் தென்னைக்கு இழப்பீடு!விவசாயிகள் சங்க மாநாட்டில் தீா்மானம்!

SCROLL FOR NEXT