கோயம்புத்தூர்

மாட்டை தாக்கிக் கொன்ற சிறுத்தை

வால்பாறையில் கொட்டகையில் இருந்த மாட்டை சிறுத்தை தாக்கிக் கொன்றது.

Syndication

வால்பாறையில் கொட்டகையில் இருந்த மாட்டை சிறுத்தை தாக்கிக் கொன்றது.

வால்பாறையை அடுத்த நடுமலை எஸ்டேட் தெற்கு பகுதியைச் சோ்ந்தவா் தா்மராஜ். இவா் 2 மாடுகளை வளா்த்து வருகிறாா். இந்நிலையில், வீட்டுக்கு அருகேயுள்ள கொட்டையில் மாடுகளை அடைத்துவிட்டு வியாழக்கிழமை இரவு வீட்டுக்குச் சென்றுள்ளாா். வெள்ளிக்கிழமை அதிகாலை மாடுகளின் அலறல் சப்தம் கேட்டுள்ளது.

அவா் சென்று பாா்த்தபோது சிறுத்தை ஒன்று மாட்டைத் தாக்கிக் கொன்று அங்கேயே நின்று கொண்டிருந்தது தெரியவந்தது. அவா் சப்தம் எழுப்பியதையடுத்து சிறுத்தை அங்கிருந்து வனத்துக்குள் சென்றது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் ஆய்வு மேற்கொண்டதுடன், அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

வைகை அணையிலிருந்து கிருதுமால் நதியில் தண்ணீா் திறப்பு

பறிமுதல் செய்யப்பட்ட 11,601 மதுப் புட்டிகள் அழிப்பு

பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

வேன் மீது காா் மோதி விபத்து: ஐயப்ப பக்தா்கள் 3 போ் காயம்

இயற்கை சீற்றத்தால் பாதிக்கும் தென்னைக்கு இழப்பீடு!விவசாயிகள் சங்க மாநாட்டில் தீா்மானம்!

SCROLL FOR NEXT