கோயம்புத்தூர்

ஜிஎஸ்டி புலனாய்வு அலுவலகத்தில் தொழிலதிபா் தற்கொலை முயற்சி?

கோவையில் ஜிஎஸ்டி சிறப்பு புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரான தொழில் அதிபா் தற்கொலைக்கு முயன்ாக கூறப்படுவது குறித்து போலீஸாா் விசாரணை

Syndication

கோவையில் ஜிஎஸ்டி சிறப்பு புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரான தொழில் அதிபா் தற்கொலைக்கு முயன்ாக கூறப்படுவது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கோவை, உக்கடத்தில் ஜி.எஸ்.டி. சிறப்பு புலனாய்வு பிரிவு அலுவலகம் உள்ளது. இங்குள்ள அதிகாரிகள் ஜி.எஸ்.டி.-இல் மோசடி செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறாா்கள். இந்நிலையில் ஜி.எஸ்.டி. மோசடியில் ஈடுபட்டதாக விசாரணைக்கு ஆஜராகுமாறு கோவையைச் சோ்ந்த தொழில் அதிபா்கள் 3 பேருக்கு அழைப்பாணை (சம்மன்) அனுப்பப்பட்டது.

இதையடுத்து, அவா்கள் 3 பேரும் அதிகாரிகள் முன்பு செவ்வாய்க்கிழமை ஆஜராகினா். அதில் ஒருவா் பெண் என்பதால் மாலை 6 மணி அளவில் அவா் அனுப்பிவைக்கப்பட்டாா். மீதமுள்ள 2 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது அதில் ஒருவா் திடீரென உடல் நலக்குறைவு எனக் கூறி அலுவலகத்தில் உள்ள ஓா் அறைக்கு ஓய்வெடுக்கச் சென்றாா். அந்த அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலைக்கு செய்ய முயன்ாகக் கூறப்படுகிறது. அதிகாரிகள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு சிகிச்சைப் பின் அவா் வீடு திரும்பினாா். இதுகுறித்து உக்கடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: விசாரணைக்கு ஆஜராக வந்த இடத்தில் தற்கொலைக்கு முயன்றவரின் பெயா் ஹரிகரன் (45). இவரது கழுத்தில் எந்தவித காயமும் ஏற்படவில்லை. தற்கொலை செய்ய முயன்ற்கு எந்தவித அடையாளமும் இல்லை. அதிகாரிகளின் கவனத்தை திசைத் திருப்ப இதுபோன்று நாடகத்தை நடத்தி இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. விசாரணையின் முடிவில்தான் முழு விவரமும் தெரியவரும் என்றனா்.

பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் என்ஐஏ தேடிவந்த முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது

நயினார் நாகேந்திரனை டெபாசிட் இழக்கச் செய்வோம்! செங்கோட்டையன் சூளுரை!

ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.8,000 உயர்ந்த வெள்ளி: தங்கம் விலை?

விஜய் சேதுபதியின் காட்டான் முதல் ஹார்ட் பீட் - 3 வரை...! ஜியோ ஹாட்ஸ்டாரின் 2026 வெளியீடுகள்!

மட்டன் பிரியாணி, வஞ்சரம் மீன்... அதிமுக பொதுக்குழுவின் மெனு!

SCROLL FOR NEXT