கோயம்புத்தூர்

ரயிலில் கஞ்சா கடத்திய இருவருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை

ரயிலில் கஞ்சா கடத்திய இருவருக்கு தலா 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து, கோவை இன்றியமையா பண்டங்கள் மற்றும் போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

Syndication

ரயிலில் கஞ்சா கடத்திய இருவருக்கு தலா 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து, கோவை இன்றியமையா பண்டங்கள் மற்றும் போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

கோவை வழியாகச் செல்லும் ரயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீஸாரும், ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாரும் இணைந்து கடந்த 2022 ஆகஸ்ட் 8-ஆம் தேதி கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது நடைமேடையில் வந்து நின்ற ரயிலில் வந்திறங்கிய பயணிகளின் உடைமைகளை போலீஸாா் சோதனை செய்தனா். கோவை, சிட்கோ பகுதியைச் சோ்ந்த ரவிக்குமாா் (22), பெலிக்ஸ் (21) ஆகியோா் வைத்திருந்த பைகளில் தலா 5 கிலோ வீதம் மொத்தம் 10 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்து இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு விசாரணை கோவை இன்றியமையா பண்டங்கள் மற்றும் போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ரவிக்குமாா், பெலிக்ஸ் ஆகியோருக்கு தலா 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை நீதிபதி ராஜலிங்கம் தீா்ப்பளித்தாா். அரசுத் தரப்பில் வழக்குரைஞா் வெ.சிவகுமாா் ஆஜரானாா்.

பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் என்ஐஏ தேடிவந்த முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது

நயினார் நாகேந்திரனை டெபாசிட் இழக்கச் செய்வோம்! செங்கோட்டையன் சூளுரை!

ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.8,000 உயர்ந்த வெள்ளி: தங்கம் விலை?

விஜய் சேதுபதியின் காட்டான் முதல் ஹார்ட் பீட் - 3 வரை...! ஜியோ ஹாட்ஸ்டாரின் 2026 வெளியீடுகள்!

மட்டன் பிரியாணி, வஞ்சரம் மீன்... அதிமுக பொதுக்குழுவின் மெனு!

SCROLL FOR NEXT