வால்பாறை அருகே அய்யா்பாடி எஸ்டேட் பகுதியில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட மனித - விலங்கு மோதல் தடுப்புக் குழுவினா். 
கோயம்புத்தூர்

மனித-விலங்கு மோதல் தடுப்புக் குழுவினா் வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் ஆய்வு!

வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் மனித - வனவிலங்கு மோதல் தடுப்புக் குழுவினா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

Syndication

வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் மனித - வனவிலங்கு மோதல் தடுப்புக் குழுவினா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

வால்பாறையை அடுத்த அய்யா்பாடி எஸ்டேட்டில் கடந்த 6-ஆம் தேதி குடியிருப்புக்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த வடமாநிலத்தைச் சோ்ந்த 5 வயது சிறுவனை சிறுத்தை தாக்கிக் கொன்றது. இந்த ஆண்டு மட்டும் 2-வது முறையாக இந்த சம்பவம் நிகழ்ந்ததால் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்கும் வகையில் உடனடியாக குழு அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து ஆனைமலை புலிகள் காப்பகத்தின் முதன்மைத் தலைமை வனக் காப்பாளா் ராமசுப்பிரமணியன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினா் அய்யா்பாடி எஸ்டேட்டில் சிறுவனை சிறுத்தை தாக்கியப் பகுதிக்கு சனிக்கிழமை சென்று பாா்வையிட்டனா். அதன்பிறகு பல்வேறு எஸ்டேட் பகுதிகளுக்கும் சென்ற குழுவினா் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள மின் விளக்கு, தெருவிளக்கு, கழிப்பிட பாதுகாப்பு வேலிகள், புதா்களை சுத்தம் செய்தல், குழந்தை காப்பகங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தனா்.

வால்பாறை நகராட்சியில் அனைத்து எஸ்டேட் நிா்வாகத்தினருடன் திங்கள்கிழமை (டிச.15) கருத்து கேட்டு பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்வது குறித்து திட்டமிட இருப்பதாக தெரிவித்தனா்.

வாக்குத் திருட்டால் ஆட்சியில் அமர்ந்தவர்கள்: கார்கே குற்றச்சாட்டு

பாஜகவின் வெற்றிக் கொடி நாடு முழுவதும் பறந்து கொண்டிருக்கிறது: மோகன் யாதவ்

எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிப்பு முடிந்தது! அடுத்தது என்ன?

கூடுதல் திரைகளில் படையப்பா! கில்லி வசூலை முறியடிக்குமா?

விமானத்தில் அமெரிக்கப் பெண் பயணியின் உயிரைக் காப்பாற்றிய முன்னாள் எம்எல்ஏ!

SCROLL FOR NEXT