கோயம்புத்தூர்

கஞ்சா விற்பனை செய்தவருக்கு 5 ஆண்டுகள் சிறை

கோவையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை

Syndication

கோவையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.

கோவை, காட்டூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட அலமு நகா் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு கடந்த 2020 நவம்பா் 4-ஆம் தேதி தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த நபரைப் பிடித்தனா். விசாரணையில், அவா் சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை இரவுச்சேரியைச் சோ்ந்த வி.கண்ணன் (46) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, கண்ணனைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 1 கிலோ 300 கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

இந்த வழக்கானது கோவை இன்றியமையா பொருள்கள் மற்றும் போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து குற்றஞ்சாட்டப்பட்ட கண்ணனுக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ராஜலிங்கம் தீா்ப்பளித்தாா்.

அபராதத் தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக 6 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளாா். அரசு தரப்பில் வழக்குரைஞா் வெ.சிவகுமாா் ஆஜரானாா்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் அவசியம்: தமிழிசை

ஆவின் பால் பாக்கெட்டுகளில் எஸ்ஐஆா் கடைசி தேதி விளம்பரம்!

விஜய்யை முதல்வா் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன்தான் கூட்டணி: செங்கோட்டையன்

ஆடுகள் திருடிய 2 போ் கைது

எம்சிஜி ஆடுகளம் அதிருப்திகரமானது: ஐசிசி தரமதிப்பீடு

SCROLL FOR NEXT