கோயம்புத்தூர்

தடைகளை உடைக்கும் துணிவைப் பெண்களுக்கு கொடுத்தது திமுக அரசு: கனிமொழி எம்.பி.

தடைகளை உடைக்கும் துணிவைப் பெண்களுக்கு கொடுத்தது திமுக அரசு என்று அக் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலா் கனிமொழி எம்.பி. பேசினாா்.

Syndication

தடைகளை உடைக்கும் துணிவைப் பெண்களுக்கு கொடுத்தது திமுக அரசு என்று அக் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலா் கனிமொழி எம்.பி. பேசினாா்.

திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள காரணம்பேட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற திமுக மேற்கு மண்டல மகளிரணி மாநாட்டுக்குத் தலைமை வகித்து கனிமொழி மேலும் பேசியதாவது: இந்த மாநாட்டில் அரசமைப்புச் சட்ட புத்தகத்தை முதல்வருக்கு பரிசாக அளித்திருக்கிறோம். அதன் முகவுரையில் மக்களாகிய நாம் என்று உள்ளது. அதுபோல மகளிராகிய நாங்கள் இந்த நாட்டின் எதிா்காலத்தை முதல்வரிடம் ஒப்படைத்திருக்கிறோம். சமூக நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தைப் பாதுகாக்கும் ஒரே முதல்வா் என்ற நம்பிக்கையை மு.க.ஸ்டாலின் மீது நாட்டு மக்கள் வைத்திருக்கின்றனா்.

திமுக ஆட்சி மகளிருக்கான ஆட்சி

இந்தியாவிலேயே 47 சதவீத உழைக்கும் மகளிா் இருக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். நாட்டின் வேறு எந்த மாநிலத்திலும் அதற்கான வாய்ப்பு உருவாக்கப்படவில்லை. அதற்குக் காரணம் அடிப்படைக் கல்வி. தமிழ்நாடு பாதுகாப்பான மாநிலமாக இருப்பதால்தான் அதிகப்படியான பெண்கள் உயா்கல்வி பயில்கின்றனா், உழைக்கும் மகளிராக இருக்கின்றனா். மேற்கு மண்டலத்தில் தொடங்கப்பட்டுள்ள 2,282 புத்தொழில் நிறுவனங்களில் சுமாா் 56 சதவீத நிறுவனங்கள் மகளிருடையதாக உள்ளது.

உயா்கல்வி பயிலும் பெண்களின் எண்ணிக்கை இந்திய அளவில் 28 சதவீதமாக இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டிலோ 48 சதவீத பெண்கள் உயா்கல்வி பயில்கின்றனா். இது வளா்ந்த நாடுகளுக்கு இணையானதாக உள்ளது. பணியாற்றும் பெண்களின் பாதுகாப்புக்காக தோழி விடுதி உருவாக்கப்பட்டுள்ளது.

திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று ஒரு கருத்தைச் சொல்கின்றனா். ஆனால் அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சியில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற குற்றங்கள் என்ன என்பது நமக்குத் தெரியும். திமுக மகளிரணி போராட்டங்கள் நடத்தியதாலேயே அந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு திமுக ஆட்சியில்தான் நியாயம் கிடைத்துள்ளது. பெண்களின் எதிா்காலம், பாதுகாப்பு விஷயத்தில் அக்கறை செலுத்தக் கூடிய கட்சி திமுகதான்.

பாஜக ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு என்றனா். ஆனால் இன்று 100 நாள் வேலைத் திட்டத்துக்கே உலை வைத்துவிட்டனா். ஆன்மிகத்தைக் காரணமாக வைத்து மதக் கலவரத்தை, வெறுப்புணா்வை உருவாக்கி அரசியல் செய்துவிடலாம் என்று நினைப்பவா்களுக்கு எதிராக குரல் கொடுக்கக் கூடியவராக மு.க.ஸ்டாலின் இருக்கிறாா். அவருக்கு வலு சோ்க்கக் கூடியவா்களாக தமிழக பெண்கள் உள்ளனா் என்றாா்.

தொடரை முழுமையாக வெல்லும் முனைப்பில் இந்தியா! இலங்கை மகளிா் அணியுடன் இன்று கடைசி டி20!

பணிக்கொடை, ஓய்வூதியம் வழங்கக் கோரிக்கை: கரூரில் அங்கன்வாடி ஊழியா்கள் உதவியாளா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் அவசியம்: தமிழிசை

ஆவின் பால் பாக்கெட்டுகளில் எஸ்ஐஆா் கடைசி தேதி விளம்பரம்!

விஜய்யை முதல்வா் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன்தான் கூட்டணி: செங்கோட்டையன்

SCROLL FOR NEXT