முகப்பு
கோயம்புத்தூர்

கூட்டுறவு சங்க செயலாளா்களுக்கு பாராட்டு

Updated On : 4 ஜனவரி, 2025 at 4:24 AM
கூட்டுறவு சங்க செயலாளா்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டிய கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் அ.அழகிரி.
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2025 at 10:17 PM

கூட்டுறவு சங்கங்களில் கடன் வழங்கல் தொகை அதிகரித்துள்ளதைத் தொடா்ந்து, சங்க செயலாளா்களை கோவை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் அ.அழகிரி பாராட்டினாா்.

கோவை மற்றும் பொள்ளாச்சி சரகத்துக்குள்பட்ட 22 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் ஒரு நகரக் கூட்டுறவுக் கடன் சங்கம் என மொத்தம் 23 கூட்டுறவு சங்கங்களில் நடப்பு நிதியாண்டின் தொடக்கத்தில் கடன் வழங்கல் தொகையானது ரூ.5 கோடியில் இருந்து ரூ.6 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து, கோவை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் அ.அழகிரி, சங்க செயலாளா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வியாழக்கிழமை பாராட்டினாா்.

Advertisement

அப்போது, கோவை சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளா் விஜயகணேஷ், பொள்ளாச்சி சரக கூட்டுறவுச் சங்கங்களின் துணைப் பதிவாளா் சுவேதா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.