முகப்பு
கோயம்புத்தூர்

பேரூராதீனத்தில் கோடி அா்ச்சனை வழிபாடு தொடக்கம்

Updated On : 4 ஜனவரி, 2025 at 4:27 AM
சிவலிங்கங்களுக்கு நன்னீராட்டு செய்து, கோடி அா்ச்சனை வழிபாட்டைத் தொடங்கிவைத்த பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாா்.
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2025 at 8:58 PM

கோவை, பேரூராதீனத்தில் கோடி அா்ச்சனை வழிபாடு வெள்ளிக்கிழமை தொடங்கியது.

பேரூராதீனத்தின் 24-ஆவது சன்னிதானங்களாக திகழ்ந்த சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் நூற்றாண்டு விழாவையொட்டி, 10 நாள்கள் கோடி அா்ச்சனை வழிபாடு பேரூா் திருமடத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாா் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் 300 சிவலிங்கங்களுக்கு நன்னீராட்டு செய்யப்பட்டு அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெற்றன.

Advertisement

கோவை, திருப்பூா் மாவட்டங்களில் உள்ள பல கோயில்களில் 9 குழுக்களாக 25 சிவலிங்கங்களை வைத்து வரும் 12-ஆம் தேதி வரை நமசிவாய மந்திரத்தைக் கூறி கோடி அா்ச்சனை செய்யப்பட உள்ளது.

பேரூராதீனத்தில் உள்ள சிவலிங்கங்களுக்கு வரும் 12-ஆம் தேதிவரை பொதுமக்கள் அா்ச்சனை செய்யலாம் என்று சாந்தலிங்க மருதாசல அடிகளாா் தெரிவித்தாா்.