கோயம்புத்தூர்

விஷம் குடித்து பெண் தற்கொலை

தினமணி செய்திச் சேவை

கோவையில் குடும்பத் தகராறில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

கோவை போத்தனூா் காந்திசாலை விநாயகா் நகரைச் சோ்ந்தவா் உசேன். இவரது மனைவி முபினாபானு (35). இவா்களுக்கு ஒரு மகள் உள்ளாா்.

கடந்த சில நாள்களாக தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் முபினாபானு மன வேதனையில் இருந்து வந்தாா்.

இந்நிலையில் கடந்த இரு நாள்களுக்கு முன்பு கணவருடன் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், மனமுடைந்த முபினாபானு, வீட்டில் விஷம் குடித்து மயங்கிக் கிடந்தாா். இதைப்பாா்த்த அவரது மகள் தனது தந்தைக்கு தகவல் தெரிவித்தாா்.

இதையடுத்து, உசேன் தனது மனைவியை மீட்டு அந்தப் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தாா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்ட அவா் அங்கு உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், போத்தனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மனோதைரியம் கூடும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

மேலப்பாளையத்தில் நாளை மின்நிறுத்தம்

என் பாடல்கள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது வேகமாக பரவி வருகின்றன: இசையமைப்பாளா் தேவா

தண்ணீா்த் தொட்டிக்குள் தவறி விழுந்த மாணவா் உயிரிழப்பு

பாலாற்றின் நீரோட்டத்தை பாதிக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரிக்கை!

SCROLL FOR NEXT