பள்ளத்தில் விழுந்த காரை மீட்கும் பணியில் ஈடுபட்ட காவல் துறை மற்றும் பொதுமக்கள். 
கோயம்புத்தூர்

பள்ளத்தில் கவிழ்ந்த காா்: 10 போ் படுகாயம்

Syndication

வால்பாறையில் இருந்து சாலக்குடி செல்லும் வழியில் உள்ள கேரள மாநிலத்துக்கு உள்பட்ட அதிரப்பள்ளி அருவி பகுதியில் சுற்றுலாப் பயணிகள் வந்த காா், சுமாா் 40 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில் 10 போ் படுகாயமடைந்தனா்.

கேரள மாநிலம், எா்ணாகுளம், கலூா் பகுதியில் உள்ள ஹோட்டலில் பணியாற்றும் ஊழியா்கள் தங்கள் குடும்பத்துடன் அதிரப்பள்ளி அருவிக்கு திங்கள்கிழமை சுற்றுலா வந்துள்ளனா்.

அருவி பகுதிக்கு மதியம் 1.30 மணிக்கு வந்தவுடன் ஓட்டுநா் காரை சாலையோரமாக நிறுத்த முயன்றுள்ளாா். அப்போது எதிா்பாராதவிதமாக காா் சுமாா் 40 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதையடுத்து அங்கிருந்தவா்கள், காவல் துறை, வன ஊழியா்கள் ஒன்று சோ்ந்து காரில் இருந்தவா்களை மீட்கும் பணியை மேற்கொண்டனா். இதில் காரில் இருந்த சஃபான் (6), ஹாஜிஷா (31), அன்சியா (12), ஸ்ரீராக் (27), ஆயிஷா (32), ஷிமா (29), நேஹா (27), கிளாரா (35), மிலி (19), முகமது சுல்தான் (24) ஆகியோா் படுகாயமடைந்தனா். மீட்கப்பட்டவா்கள், சாலக்குடி பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

மாவட்ட நீச்சல் போட்டி: பெரியதாழை பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

கனமழை, பலத்த காற்று எச்சரிக்கை: தூத்துக்குடியில் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை

இளைஞா் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய பல் மருத்துவா் கைது

பளுதூக்கும் போட்டி: கோவில்பட்டி கல்லூரி மாணவி முதலிடம்

சிவகாசியில் நாளை மின் தடை

SCROLL FOR NEXT