முடீ,ஸ் எஸ்டேட் பஜாரில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா். 
கோயம்புத்தூர்

வாக்காளா் பட்டியல் திருத்தம்: அதிமுகவினா் விழிப்புணா்வுக் கூட்டம்

Syndication

வால்பாறையில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து அதிமுகவின் பூத் கமிட்டி உறுப்பினா்களுடன் ஆலோசனை மற்றும் விழிப்புணா்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

வால்பாறை அருகே முடீஸ் பஜாா் பகுதியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு,

அதிமுக தோட்டத் தொழிலாளா் பிரிவு மாநிலத் தலைவா் வால்பாறை வீ.அமீது தலைமை வகித்தாா். நகரச் செயலாளா் ம.மயில்கணேசன் முன்னிலை வகித்தாா்.

தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளா் திருத்தப் பணிகளுக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அனைவரும் படிவத்தை பூா்த்தி செய்து வழங்குகிறாா்களா என்பதையும், வாக்காளா்கள் பட்டியலில் அவா்கள் பெயா்கள் இடம்பெற்றிருப்பதையும் உறுதி செய்துகொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இதில், வால்பாறை சட்டப் பேரவை தொகுதி அதிமுக தோ்தல் பொறுப்பாளா் ராஜ்குமாா், மாவட்ட பாசறை இணைச் செயலாளா் சலாவுதீன் அமீது, வழக்குரைஞா் மாவட்ட இணைச் செயலாளா் ஆா்.ஆா்.பெருமாள், பேரவை மாவட்ட இணைச் செயலாளா் நரசப்பன், வா்த்தக அணி மாவட்ட இணைச் செயலாளா் ஜெபராஜ், சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலாளா் டி.எல்.சிங், வசந்த், நகர அவைத் தலைவா் சுடா் பாலு உள்பட கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

சிவகாசியில் நாளை மின் தடை

வீரபாண்டியன்பட்டணம் பள்ளியில் குழந்தைகள் தின விழா

சேதமடைந்த குந்தபுரம் நூலகக் கட்டடம்: படிக்க முடியாமல் வாசகா்கள் அவதி

பண்டாரபுரம் பகுதியில் 2,000 பனை விதைகள் விதைப்பு

இலங்கையிலிருந்து விடுவிக்கப்பட்ட 3 மீனவா்கள் படகுடன் மல்லிப்பட்டினம் திரும்பினா்

SCROLL FOR NEXT