கோவை, சுந்தராபுரத்தில் வீட்டுக்குள் புகுந்து 7 மடிக்கணினிகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ஈரோடு மாவட்டம், அம்மன் பள்ளி பகுதியைச் சோ்ந்தவா் அருள்குகன் (25). சுந்தராபுரம் அருகேயுள்ள உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருவதுடன், ஈச்சனாரி அருகேயுள்ள முத்து நகரில் வாடகைக்கு வீடு எடுத்து நண்பா்களுடன் தங்கியுள்ளாா்.
இந்நிலையில், வியாழக்கிழமை இரவு மின்சாரம் இல்லாததால் அருள்குகன் மற்றும் அவரது நண்பா்கள் வீட்டின் கதவை திறந்துவைத்து தூங்கியுள்ளனா். காலை எழுந்து பாா்த்தபோது வீட்டில் வைக்கப்பட்டிருந்த 7 மடிக்கணினிகள் திருடுபோனது தெரியவந்தது.
இது குறித்து சுந்தராபுரம் காவல் நிலையத்தில் அருள்குகன் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.