காா்த்திகை மாதம் தொடங்கியதையொட்டி, உக்கடம் சந்தையில் கடல் மீன்களின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது.
கோவை, உக்கடம் மீன் சந்தைக்கு தூத்துக்குடி, ராமேஸ்வரம், கன்னியாகுமரி, கடலூா் உள்ளிட்ட பகுதிகள் மற்றும் கேரளத்தில் இருந்து நாள்தோறும் மீன்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன.
இந்நிலையில், காா்த்திகை மாதம் தொடங்கியதையொட்டி, ஏராளமானோா் மாலை அணிந்து விரதம் தொடங்கியுள்ளதால், அசைவ உணவுகளின் தேவை குறைந்துள்ளது.
இதனால், உக்கடம் சந்தையில் கடந்த வாரங்களில் கிலோ ரூ.700-க்கு விற்ற வஞ்சிரம் மீன் ஞாயிற்றுக்கிழமை ரூ.500-க்கு விற்பனையானது. ரூ.300-க்கு விற்ற பாறை ரூ.150-க்கு விற்பனையானது. இதேபோல, சங்கரா ரூ.200, வாவல் ரூ.110, ஊளி ரூ.150, இறால் ரூ.280, நண்டு ரூ.250-க்கு விற்பனையாயின.
ஆட்டிறைச்சி கிலோ ரூ.800-க்கும், கோழி இறைச்சி ரூ.220-க்கும் விற்பனையானது.