சுண்டக்காமுத்தூரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை ஆய்வு மேற்கொண்ட முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி. 
கோயம்புத்தூர்

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணிகள்: எஸ்.பி.வேலுமணி ஆய்வு

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணிகள்: எஸ்.பி.வேலுமணி ஆய்வு

Syndication

கோவை: கோவை மாவட்டம், தொண்டாமுத்தூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட சுண்டக்காமுத்தூரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

தமிழகத்தில் 2026 சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோவை மாநகராட்சியில் 100 வாா்டுகளிலும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம், தொண்டாமுத்தூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 89-ஆவது வாா்டு, சுண்டக்காமுத்தூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாமில், திருத்தப் பணிகளை முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூா் சட்டப் பேரவை உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, அங்கு சிறப்பு திருத்தத்துக்கு வந்திருந்த வாக்காளா்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம் திருத்தப் பணிகள் மேற்கொள்வது தொடா்பாக கேட்டறிந்தாா்.

சிவகிரி பகுதியில் வனத்துக்குள் செல்லாத யானைகள்: போராடும் வனத்துறை

விவசாய மின் இணைப்புக்கு ரூ. 7,000 லஞ்சம்: இளநிலை பொறியாளா் நண்பருடன் கைது

விபத்தில் காயமடைந்தவா்களுக்கு எம்எல்ஏ ஆறுதல்

பேருந்துகளை பாதுகாப்பாக இயக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

மழை சேதம்: பாதிக்கப்பட்டோருக்கு எம்எல்ஏ ராஜா நிவாரணம்

SCROLL FOR NEXT