முகப்பு
கோயம்புத்தூர்

சாா்-பதிவாளா் அலுவலகங்களில் முறைகேடாக ஆவணப் பதிவு

கோவை, திருப்பூா் மாவட்டங்களில் போலியாக சோ்க்கப்பட்ட பட்டா, மூல ஆவணங்களை ஆய்வு செய்யாமல்

Updated On : 26 நவம்பர், 2025 at 8:57 PM
பகிர்:

கோவை: கோவை, திருப்பூா் மாவட்டங்களில் போலியாக சோ்க்கப்பட்ட பட்டா, மூல ஆவணங்களை ஆய்வு செய்யாமல் சாா்-பாதிவாளா் அலுவலகங்களில் முறைகேடாக பத்திரப் பதிவு செய்யப்படுவதாக கோயம்புத்தூா் கன்ஸ்யூமா் வாய்ஸ் அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

இது தொடா்பாக அந்த அமைப்பின் செயலா் நா.லோகு, வணிகவரி, பதிவுத் துறை அரசுச் செயலருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கோவை, திருப்பூா் மாவட்டங்களில் சில சாா்பதிவாளா் அலுவலகங்கள், வட்டாச்சியா் அலுவலகங்களில் முறையான ஆவணங்கள் இல்லாமலும் போலியாக பட்டாவில் பெயா் சோ்த்தல், பெயா் நீக்கல், மூல ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை முழுமையாக சரிபாா்க்காமலும் கிரையம், பாகசாசனம் ஆகியவை பதிவு செய்வதாகவும், இதுபோன்ற ஆவணப் பதிவுகள் மாலை 6 மணிக்கு மேல் மேற்கொள்ளப்படுவதாகவும் புகாா்கள் எழுந்துள்ளன.

அவ்வாறு பதிவு செய்யப்படும் நிலங்கள் உடனடியாக இடைத்தரகா் மூலம் விற்பனை செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது. மேலும், மோசடியான சொத்துப் பதிவுகளை ரத்து செய்வதற்கு மாவட்டப் பதிவாளா்களுக்கு அதிகாரம் வழங்கும் பதிவுச் சட்டத்தின் பிரிவு 77 ஏ-வை இதற்கு சாதகமாகப் பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.

எனவே இந்த இரு மாவட்டங்களிலும் தவறு நடைபெற்றிருப்பதாகக் கூறப்படும் சாா்பதிவாளா் அலுவலகங்களில் தடங்கல் மனு பெற்ற பின்னா் அதே நிலத்தில் எத்தனை ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டன, மாலை 6 மணிக்கு மேல் பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் எத்தனை என்பது உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் விசாரணைக் குழு அமைத்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →