குனியமுத்தூா், க.க.சாவடி ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (அக்டோபா் 29) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை ஏற்படும் பகுதிகள்: குனியமுத்தூா் துணை மின் நிலையம்: குனியமுத்தூா், புட்டுவிக்கி, இடையா்பாளையம், சுந்தராபுரம் (ஒரு பகுதி), பி.கே.புதூா், கோவைப்புதூா், நரசிம்மபுரம், சுண்டக்காமுத்தூா் (ஒரு பகுதி).
க.க.சாவடி துணை மின் நிலையம்: முருகன்பதி, சாவடிப்புதூா், நவக்கரை, அய்யன்பதி, பிச்சனூா், வீரப்பனூா், ஏ.ஜி.பதி, குமிட்டிபதி, திருமலையாம்பாளையம், ரங்கசமுத்திரம்.