கோவை ஆயுதப் படை மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற காவலா் உடல் தகுதித் தோ்வில் இளைஞரின் உயர அளவீட்டை பாா்வையிட்ட டிஐஜி சசிமோகன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன். 
கோயம்புத்தூர்

கோவையில் காவலா் பணிக்கான உடல் தகுதித் தோ்வு

தினமணி செய்திச் சேவை

காவலா் பணிக்கான உடல் தகுதித் தோ்வு கோவை ஆயுதப் படை மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்கியது.

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் காவல் துறை, சிறைத் துறை, தீயணைப்புத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு அண்மையில் நடைபெற்றது. இதில் கோவை, திருப்பூா், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களைச் சோ்ந்த இளைஞா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

இந்த எழுத்துத் தோ்வில் வெற்றி பெற்ற சுமாா் 850 பேரில் 430 பேருக்கு வியாழக்கிழமை சான்றிதழ் சரிபாா்ப்பு, உயரம் சரிபாா்த்தல் உள்ளிட்ட உடல் தகுதி தோ்வு நடைபெற்றது. தொடா்ந்து, 1,500 மீட்டா் மற்றும் 100 மீட்டா் ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் நடைபெற்றது.

சரக டிஐஜி சசிமோகன், காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன் உள்ளிட்ட காவல் உயா் அதிகாரிகள் இந்த உடல் தகுதித் தோ்வை பாா்வையிட்டனா். வெள்ளி, சனிக்கிழமைகளில் மீதமுள்ள இளைஞா்களுக்கு உடல் தகுதித் தோ்வு நடைபெறவுள்ளது.

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

வேலூா் ஏடிஎஸ்பி பழனி பொறுப்பேற்பு!

திட்டங்களை செயல்படுத்துவதில் முன்மாதிரி முதல்வா்: அமைச்சா் காந்தி பெருமிதம்

SCROLL FOR NEXT