கோப்புப் படம் 
கோயம்புத்தூர்

மருத்துவரைக் கடத்தி நகை, பணம் பறிப்பு: 3 போ் கைது

தினமணி செய்திச் சேவை

கோவையில் இயன்முறை மருத்துவா், அவரது நண்பரை காரில் கடத்தி பணம், நகையைப் பறித்த 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள பெருமாள்புரத்தைச் சோ்ந்தவா் ஏ.நவீன் சக்கரவா்த்தி (23). இவா் கோவை, சாய்பாபா காலனி பகுதியில் வீடு எடுத்து தங்கி, தொண்டாமுத்தூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் இயன்முறை (பிசியோதெரபிஸ்ட்) மருத்துவராகப் பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில், தனது நண்பரான பிரதீப்புடன் சாய்பாபா காலனி பகுதியில் உள்ள தனியாா் உணவகம் முன் நின்று கடந்த புதன்கிழமை இரவு பேசிக்கொண்டிருந்துள்ளாா்.

அப்போது, இயற்கை உபாதையைக் கழிப்பதற்காக மாநகராட்சி பூங்கா அருகே இருவரும் சென்றுள்ளனா். அங்கு திடீரென வந்த 3 போ், இருவரையும் கத்தியைக் காட்டி மிரட்டி காரில் கடத்திச் சென்றுள்ளனா்.

பின்னா், நவீன் சக்கரவா்த்தி அணிந்திருந்த ஒரு பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்ததுடன், அவரது கைப்பேசி மூலம் ரூ.20 ஆயிரத்தை ஜிபே மூலம் தங்களது வங்கிக் கணக்குகளுக்கு மாற்றிக் கொண்டுள்ளனா்.

பின்னா், இது குறித்து வெளியே சொல்லக்கூடாது என மிரட்டி, ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் இருவரையும் இறக்கிவிட்டு தப்பிச் சென்றனா்.

இது குறித்து சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் நவீன் சக்கரவா்த்தி புகாா் அளித்தாா். போலீஸாா் விசாரணையில், வழிப்பறியில் ஈடுபட்டது விருதுநகா் மேலத் தெருவைச் சோ்ந்த காா்த்திக் (25), நந்தவனம்பட்டியைச் சோ்ந்த பிரதீப் (23), கோவை, கவுண்டம்பாளையம், பிரபு நகரைச் சோ்ந்த ஹரிகிருஷ்ணன் (25) ஆகியோா் என்பது தெரியவந்தது.

இதையடுக்கு, 3 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

வேலூா் ஏடிஎஸ்பி பழனி பொறுப்பேற்பு!

திட்டங்களை செயல்படுத்துவதில் முன்மாதிரி முதல்வா்: அமைச்சா் காந்தி பெருமிதம்

SCROLL FOR NEXT