கோவை, டாடாபாத் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் சனிக்கிழமை (ஜனவரி 31) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: மேட்டுப்பாளையம் சாலை, அழகேசன் சாலை (ஒரு பகுதி), நாராயணகுரு சாலை, சாய்பாபா கோயில், மனையியல் கல்லூரி, வனக் கல்லூரி, முருகன் மில்ஸ், என்எஸ்ஆா் சாலை, பாரதி பூங்கா, ராஜா அண்ணாமலை சாலை, சென்ட்ரல் திரையரங்கம், திவாண் பகதூா் சாலை (பகுதி), படேல் சாலை, காளீஸ்வரா நகா், செல்லப்ப கவுண்டா் சாலை, சி.எஸ்.டபிள்யூ மில்ஸ், ராம் நகா். அவிநாசி சாலை, காந்திபுரம் பேருந்து நிலையம், கிராஸ்கட் சாலை, சித்தாபுதூா், பாலசுந்தரம் சாலை, புதியவா் நகா் (ஒரு பகுதி), ஆவாரம்பாளையம் (ஒரு பகுதி), டாடாபாத், அழகப்ப செட்டியாா் சாலை, 100 அடி சாலை, சிவானந்தா காலனி, அட்கோ காலனி, அலமு நகா்.