முகப்பு
கோயம்புத்தூர்

வால்பாறையில் 52 இடங்களில் சிசிடிவி கேமராக்கள்

Updated On : 8 மார்ச், 2026 at 9:31 PM
வாட்டா்பால் எஸ்டேட் காட்சிமுனை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள போலீஸ் பூத்தை திறந்துவைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன்.
பகிர்:

வால்பாறையில் 52 இடங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் பயன்பாட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா்.

கோவை மாவட்டம், வால்பாறையில் உள்ள சுற்றுலாத் தலங்களைக் காணவும், அங்கு நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்கவும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.

இந்நிலையில், வால்பாறையில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையிலும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் போலீஸாா் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில், உள்ளூா் மக்கள், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி வால்பாறை நகா் உள்ளிட்ட 52 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

மேலும், வாட்டா்பால் எஸ்டேட் காட்சிமுனை, கூழாங்கல் ஆறு ஆகிய பகுதிகளில் போலீஸ் பூத் அமைக்கப்பட்டுள்ளது. இதன் பயன்பாட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன் தொடங்கிவைத்தாா். இந்நிகழ்ச்சியில், வால்பாறை டி.எஸ்.பி. பவித்ரா, ஆய்வாளா் ராமசந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →